என்னுடைய கட்டளை MY COMMISION 51-05-05 Los Angeles California U.S.A. சகோதரனே, உங்களுக்கு நன்றி. 2 மாலை வணக்கம். (உங்களுக்கு நன்றி, சகோதரனே.) எல்லோருக்கும் மாலை வணக்கம். இன்றிரவு வெளியே இருப்பதில் மிக்க மகிழ்ச்சி; நன்றாக உணருகிறேன். நேற்றிரவு கூட்டத்திற்குப் பிறகு நான் நன்றாக உணருகிறேன். பார்வையற்ற அந்த ஏழைப் பெண் தன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொள்வதைக் காண்பது எனக்கு அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருந்தது. இன்னும் அநேகர்... 3 நேற்று இரவு நடந்த கூட்டத்திற்கு முந்தைய நாள் இரவுக்குப் பிறகு, ஒரு பெண்மணி அநேகமாக இப்போது இங்கேயே இருக்கலாம், தங்கள் பகுதியில் நடந்த சில விஷயங்களைப் பற்றி இன்று எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஒரு கடிதம் அனுப்பினாள், நீண்ட காலமாக முற்றிலும் செவிடாக இருந்த ஒரு பெண்ணுக்குக் கர்த்தர் மீண்டும் கேட்கும் திறனை அளித்ததாகவும், மேலும், அவள் இருந்த வீட்டிற்குள் கர்த்தருடைய தூதன் வந்து அவளுக்குக் கேட்கும் திறனை அளித்ததாகவும் அவள் கூறியிருந்தாள். அவளால் முடியும்... அவளுடைய சாட்சியை அங்கே பின்னால் எழுதி வைக்கும்படி நாங்கள் விரும்புகிறோம். எனவே, அது மிகவும் அருமையாயுள்ளது. நாங்கள் அதற்காக மகிழ்ச்சியடைகிறோம், மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். 4 எனவே, ஞாயிறு இரவுக் கூட்டத்தை முடிக்கப்போவதாக நாங்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம், ஆனால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது என்று நாங்கள் தீர்மானித்தோம், நாம் இன்னும் சற்று நேரம் தொடர்வது நல்லது. நாங்கள்...நாங்கள் போக இருந்தோம்...(சபையோர் கரங்களைத் தட்டுகின்றனர்) உங்களுக்கு நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி, அது என்னை நன்றாக உணரச் செய்கிறது. 5 நான் அதைச் செய்து கொண்டிருந்ததற்கான காரணம், இங்கே ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் அல்ல, ஆனால் சகோதரன் ப்ரீமேன் மீதான மரியாதை நிமித்தமாகவே, நீங்கள் பாருங்கள், அவர் கூட்டம் நடத்தும் அதே நேரத்தில் நான் கூட்டம் நடத்த விரும்பவில்லை. அவருடைய கூட்டத்திற்கு நான் எந்த விதத்திலும் தடையாக இருப்பதாக நினைத்தால், நான் அதைச் செய்யமாட்டேன். ஆனால் நான்-நான்-நான் சற்று முன்னர் ஒரு சிறு குறிப்பை வைத்திருந்தேன், எனவே நான் அதைக் குறித்து இப்பொழுது நன்றாக உணருகிறேன், அது-அது சரிதான், எனவே...நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி. 6 ஊழியம் செய்யும் சகோதரர்களில் சிலருக்குள் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டு, நமது கூட்டங்கள் குழம்பிப் போனதாகவும், நாம் ஒரே நேரத்தில் ஒரே நகரத்தில் கூடியதாகவும் ஆகிவிட்டது. நிச்சயமாக நாம் அப்படிச் செய்ய விரும்பமாட்டோம். ஆனால் ஜனங்களாகிய நாங்கள் உங்கள்பேரில் விரைந்து செல்ல முயற்சிக்கிறோம் என்று நீங்கள் நினைக்க நாங்கள் விரும்பவில்லை. 7 ஆனால் நான் நினைக்கிறேன், யாக்கோபு ஒரு கிணறு தோண்டினான் என்று நான் நினைக்கிறேன், பெலிஸ்தியர்கள் அவனை விரட்டியடித்தனர், எனவே அவன் அதைக் காழ்புணர்ச்சி என்று அழைத்தான்; அவன் மற்றொன்றைத் தோண்டியபோது, அவர்கள் அவனைத் துரத்தினபோது, அதற்குச் கலகம் என்று பெயரிட்டான்; எனவே அவன் மூன்றாவது ஒன்றைத் தோண்டியெடுத்து, "அங்கே எங்கள் எல்லோருக்கும் இடம் உண்டு" என்றான். எனவே...உங்களுக்கு நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி. 8 எனவே, சகோதரன் ஃப்ரீமேன் அவர்களும் நானும் சிக்காகோவில் உள்ள அந்தச் சிறு நகரத்தில் இருந்தபோது, பாருங்கள், நான் அதை அப்படியே விட்டுவிட்டு, நடந்து சென்றுவிட்டேன், உங்களுக்குத் தெரியும், நாங்கள்...ஆனால் கலிபோர்னியாவில் நம் அனைவருக்கும் இடம் உண்டு, இங்கு நமக்கு ஒரு பெரிய கிணறு இருக்கிறது. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த நகரத்தின் பரப்பளவு நானூற்றைம்பது சதுர மைல்கள் என்று ஒருவர் என்னிடம் கூறினார். எனவே அங்கே ஏராளமான இடங்கள் உள்ளன, இல்லையா? ஏராளமான சுகவீனமான ஜனங்களும் கூட, அதனால், அவர்களில் அநேகர் தங்களுடைய ஆரோக்கியத்திற்காக இங்கு வருகிறார்கள். தேவன் இங்கே நம் இருவருக்கும் ஒரு மகத்தான கூட்டத்தை ஏற்பாடு செய்வார் என்றும், எங்கும் ஆராதனைகளை ஆசீர்வதிப்பார் என்றும், எல்லா தொடர் கூட்டங்களும், ஊழியக்காரர்கள் எங்கும் உள்ளனர் என்றும் நான் நம்புகிறேன். 9 நாளை ஓய்வுநாளில், தேவன் அநேக ஆத்துமாக்களை தேசங்களைக் கடந்து, எங்கும் அவருடைய மகிமைக்கென்று அருள வேண்டும் என்று நாம் ஜெபிப்போமாக. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் மிக விரைவில் வீடு செல்லப் போகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், நாங்கள் இப்பொழுது ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம், எனவே அது எந்த நேரத்தில் சம்பவிக்கக்கூடும் என்பதை நாம் அறியாதபடி, நாம் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் சுத்தப்படுத்திக் கொண்டேயிருப்போமாக. 10 நாங்கள் அவரை நேசிக்கிறோம்; நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன், இல்லையென்றால் நீங்கள் இங்கிருக்க மாட்டீர்கள். உங்கள் இருதயத்தில் தேவனை நேசிக்கும் ஒரு சிறிய துளி இருந்ததால்தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள், இல்லையென்றால் நீங்கள் இங்கே வந்திருக்கவே மாட்டீர்கள், நீங்கள் வேறு எங்காவது இருப்பீர்கள். எனவே, நீங்கள் அதைச் செய்வதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 11 ஆகையால், நேற்று மாலை அப்படிப்பட்ட ஒரு-ஒரு மகத்தான கூட்டம், இந்த இன்றிரவு நம்முடைய கர்த்தருக்கான மற்றொரு மகத்தான கூட்டமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது, நாளைப் பிற்பகல், கர்த்தருக்கு சித்தமானால், நாளைப் பிற்பகல் நான்-நான் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன், சரி, நீங்கள் அதைப் பிரசங்கிக்க முயற்சி என்று அழைப்பீர்களேயானால் நலமாயிருக்கும். நான், மற்ற சமயம் உங்களிடம் கூறினது போல, ஒரு பிரசங்கி என்று வரும்போது, நான் ஒரு விதமான உதிரி சக்கரமாக இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது என்னவென்றால்...உங்களுக்குத் தெரியுமல்லவா, ஒரு காற்று போன டயர் உண்டாகும்போது, தொடர்ந்து செல்ல ஒரு மாற்று டயரைப் பயன்படுத்துவது. எனவே நாம்...ஆனால் நமக்கு எந்தக் காற்றுப் போன டயரும் இல்லை, ஆனால் அவர்கள் அதை எப்படியும் உபயோகிக்கப் போகிறார்கள். 12 எனவே நாளைப் பிற்பகல்...நான் எப்பொழுதுமே பிற்பகலில் பேச முயற்சிக்கிறேன். ஜனங்கள் எனக்காக ஒரு-ஒரு மிஷனரி காணிக்கையை எடுக்கிறார்கள், அது-அது அயல்நாட்டு மிஷனரிமார்களுக்கு வெளிநாட்டு ஊழியங்களுக்கு உதவி செய்கிறது. நான் அதைச் சுயமாக அனுபவித்துப் பார்க்கும் வரை மிஷனரிகள் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. அது மகிமையானது, ஆனால், ஓ என்னே, யாருக்காவது உதவி தேவைப்படுமாயின், அங்கே தொலைதூர முனைகளில் உள்ள ஒரு ஏழை மிஷனரியாக இருந்து, அவர் ஒவ்வொரு காரியத்தையும் எதிர்கொள்வதற்கு வேண்டியதாயுள்ளது, விசேஷமாக இயற்கைக்கு மேம்பட்டதோடு அவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறவர்கள். 13 எனவே, நாளைப் பிற்பகல், அது இரண்டு முப்பது மணிக்கு இருக்கும் என்று நான்-நான் நம்புகிறேன், சகோதரர்களே, அது அவ்வாறு இருக்கவில்லையா, நாம்...? நாளைப் பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு. நாங்கள் உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சியடைவோம், உங்களுடைய சபையில் ஆராதனை இல்லையென்றால்...இப்பொழுது, நாளை ஞாயிற்றுக்கிழமை, உங்களுடைய சொந்த சபைகளில் ஆராதனை உண்டு, எனவே, நீங்கள் உங்கள் சொந்த ஆராதனை இல்லையெனில், இங்கு வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருப்போம். நிச்சயமாகவே, உங்களுக்கு உங்களுடைய சொந்த சபையில் ஒரு ஆராதனையை இருந்தால், உங்களுடைய ஆராதனையின்போது, ஒவ்வொரு நபரும் அவர்களுடைய சபையில் உங்களுடைய பதவியில் நிற்க வேண்டிய உங்களுடைய கடமை அதுவேயாகும். ஆனால் உங்களுக்குச் சபையே இல்லையென்றால், நீங்கள்...அல்லது உங்களுடைய இடத்தில் சபையைக் கொண்டிருக்க வில்லையென்றால், வெளியே வந்து எங்களோடு இருங்கள். நகரத்தைச் சுற்றிலும் எங்கும் பிரசாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். தேவன்...அறுவடை அறுக்கிறவர்களை தேவன் அதிகமாக அனுப்ப வேண்டும் என்று ஜெபிக்கிறோம், ஏனென்றால் நமக்கு நிச்சயமாகவே அவர்கள் தேவை. 14 எங்களுடைய அருமையான ஜனங்களில் அநேகர் அவர்களோடு விருந்துக்கு வரும்படி எனக்கு அழைப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள், மேலும்-மேலும், ஓ, நான் நிச்சயமாகவே ஒவ்வொருவருக்கும் அதைச் செய்ய விரும்புகிறேன். நான் அதைச் செய்ய விரும்புகிறேன், ஆனால் அது, எனக்குச் சற்று கடினமாக இருக்கும், நான் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மற்றொன்றைத் தவிர்த்தால், மற்றொன்றை விட நான் அதற்குச் சற்று அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக அவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் நான்-நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன், நீங்கள் என்னை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நாம் கர்த்தரை நேசிப்போமானால், நாம் அந்தவிதமாக ஒருவரையொருவர் உணருவோம். எனவே, அப்பொழுது நாம்...என்றோ ஒரு நாள், நான் உங்கள் எல்லோரோடும் விருந்துக்குச் செல்லப் போகிறேன். ஆமென். அது அற்புதமாயிருக்குமல்லவா? யுத்தம் முழுவதுமாக முடிவுற்று, புகையானது அடங்கியபிறகு என்று நான் நினைக்கிறேன், நாம் மேலே வந்து, நம்முடைய அன்பார்ந்தவர்களை சந்திக்கிறோம், அதன்பின்னர் அவரைச் சந்திக்கிறோம், நாங்கள் ஒருவருக்கொருவர் எதிரே உள்ள மேஜையில் அமர்கிறோம். அது அற்புதமாயிருக்குமல்லவா? மேசையைச் சுற்றி ஒரு ஊன்றுகோலோ அல்லது சக்கர நாற்காலியோ ஒருபோதும் இருக்காது, ஒருபோதும்... ஓ, அது அற்புதமாயிருக்கவில்லையா? 15 அதன்பின்னர் நாம் அங்கே அமர்ந்திருப்பதைக் காணும்போது, நான் மேஜையின் குறுக்கே நோக்கிப் பார்த்து, "நல்லது, சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னே!" அப்பொழுது நாம்-நாம் சற்று அழ வேண்டியதாயிருக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நம்மால் முடிந்தால், நாம் சற்று சந்தோஷத்திற்காக அழுவோம். 16 அப்பொழுது அதன் பிறகு, மேசையின் தலைப்பிலிருந்து நம்முடைய ராஜா தம்முடைய மகத்துவத்தில், அவர் நம் எல்லோரோடும் நடந்து வந்து, தம்முடைய கரங்களை நம்மேல் போட்டு, "நீ அதிகமாகப் பாடுபட்டாய், எனக்காக நீ அதிகமாய் கடந்து சென்றாய்" என்பார். எல்லா கண்ணீரையும் துடைத்து, "இப்பொழுது, இனி அழாதேயுங்கள். நாம்-நாம்...அது எல்லாம் முடிந்து விட்டது" என்பார். ஓ, ஏனென்றால் அது மகத்தான நேரமாயிற்றே! அதனால்தான் நாம் இங்கே இருக்கிறோம், இல்லையா? அவருடைய கரம் உங்களைச் சுற்றிலும் இருப்பதை உணர்வது அற்புதமாயிருக்கும் அல்லவா, "இப்பொழுது அழாதீர்கள். கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசித்து, நீங்கள் ஒரு நல்ல போராட்டத்தைப் போராடினீர்கள்" என்று கூறுவார். எனவே நாம் இங்கிருக்கும்போது, இந்த வாய்ப்பினை பெற்றுள்ளபோது, நாம் இதை ஒரு நல்ல போராட்டமாக, ஒரு உண்மையான போராட்டமாக ஆக்குவோமாக. 17 நான் சில வேதவாக்கியங்களை வாசிக்க விரும்புகிறேன், நாம் நேராக ஜெப வரிசையில் துவங்கப் போகிறோம், நாம் நல்ல நேரத்தை உடையவர்களாயிருந்து, காலையில் ஞாயிறு பள்ளிக்குத் தாமதமாக வராதபடிக்கு, ஜனங்களைச் சீக்கிரமாக வெளியே அனுப்பிவிடலாம். நாம் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், நம்மால் முடிந்தால், சீக்கிரமாகவே புறப்படட்டும், அதனால் ஜனங்கள் வேலைக்குச் சென்றுவிட்டு, அடுத்த நாள் இரவு திரும்பி வர முடியும். 18 எத்தனை பேர் முதன் முறையாக இங்கு வந்திருக்கிறீர்கள்? நாங்கள் உன்னுடைய கரங்களைக் காணட்டும்...என்னே, அது அற்புதமானது! நாம் அவர்களுக்கு ஒரு கரத்தைக் கொடுப்போமாக, இங்குள்ள அவர்கள் எல்லோருமே...அது அற்புதமானது! அது உண்மை. என்னே, நீங்கள் இங்கு இருப்பதற்காகவும், உங்களோடு பழகுவதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நான் உங்களுடைய கரத்தைக் குலுக்கி உங்களை வரவேற்கும்படி செய்ய முடிந்தால் நலமாய் இருக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய கரங்களை உங்களைச் சுற்றிப் போட்டு, "நீங்கள்- நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள் என்பதையே அவர் இங்குப் பொருட்படுத்துகிறார்" என்பார். 19 இப்பொழுது, ஆராதனைகளில், நம்முடைய ஆராதனைகள் வழக்கமாக இருப்பதை விட சற்று வித்தியாசமானவை, நாங்கள் வரும் தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளில், அது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னைச் சந்தித்த இயற்கைக்கு மேம்பட்டவரின் செயல்பாட்டின் கீழ் உள்ளது. இது கண்டிப்பாக ஒரு பாப்டிஸ்டு உபதேசமாயிருக்கிறபடியால், நான்...ஒரு பாப்டிஸ்டாக இருப்பதைக் குறித்து நான் அநேக முறை குறிப்பிடுவதை நீங்கள் கேட்கிறீர்கள், இப்பொழுது, நான்-நான் ஒரு ஒரு பாப்டிஸ்டு அல்ல, நான் ஒரு நான் ஒரு கிறிஸ்தவன், அவ்வளவுதான். என்னால் இன்னமும் ஒரு பாப்டிஸ்டாகவும், ஒரு கிறிஸ்தவனாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 20 ஆனால்-ஆனால் அண்மையில் லிட்டில் ராக் என்ற இடத்தில், நான்...அங்கே ஒரு மனிதன் சில ஊன்றுகோல்களை வைத்திருந்தார், அவர்...பல ஆண்டுகளாக அவற்றைப் பயன்படுத்தி வந்தார், அவர் அந்த வரிசையில் நின்றார், கர்த்தர் அவரைச் சுகப்படுத்தினார். ஓ, அவர் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தார்! அவர் சத்தமிட்டுக் கொண்டு, ஒரு ஊன்றுகோலை மற்ற ஒன்றின் மேல் தொங்கவிட்டு, தெருவில் இறங்கி சத்தமிட்டுக்கொண்டே சென்று, லிட்டில் ராக் வழியாக ஒவ்வொருவருக்கும் சாட்சி பகர்ந்தார். 21 அடுத்த நாள் இரவு, அவர் மீண்டும் ஆராதனைக்கு வந்தபோது, அவர் எழுந்து நின்று, அவர், "பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் கூறுவதை நான் கேள்விப்பட்டேன்...என்னால் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார். அவர், "இப்பொழுது நீர் பிரசங்கித்ததை நான் கேட்டபோது, நீர் ஒரு நசரேயன் என்று நான் நிச்சயித்திருந்தேன்" என்றார். அந்தவிதமாகத்தான் அவர் இருந்தார். மேலும், "நீர் ஒரு நசரேயன் என்று நான் நிச்சயமுடையவனாயிருந்தேன்" என்றார். "அப்பொழுது நான் எல்லா பெந்தேகோஸ்தே ஜனங்களையும் கண்டேன், நான், 'இல்லை, அவர் ஒரு பெந்தேகோஸ்தே' என்றேன். இங்கே நீங்கள் ஒரு பாப்டிஸ்டு என்று கூறுகிறீர்கள்" என்றார். அவர், "என்னால்- என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே" என்றார். அதற்கு நான், "ஓ, அப்பா, அது சுலபம்" என்றேன். நான், "நான் ஒரு பெந்தேகோஸ்தே-நசரேய-பாப்டிஸ்டு" என்றேன். 22 எனவே, அது...ஆம். தேவன் நம் எல்லோரையும் நேசிக்கிறார். அவருடைய குமாரன் மூலமாக, இராஜ்ஜியத்தில் மீண்டும் பிறப்பதன் மூலம் நாம் யாவரும் குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். 23 எனவே நான்... உண்மையாகவே, நான்...அதாவது...நான் மிஷினரி பாப்டிஸ்டு சபையில் நியமிக்கப்பட்டேன், அது முதற்கொண்டு வேறெந்த சபையிலும் நியமிக்கப்படவில்லை. ஆனால் தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளுக்குள் வரும்போது, நான் இதை ஒரு சுவிசேஷத்திற்கு இடையேயான, ஒவ்வொருவருக்குமான ஒரு ஸ்தாபனமற்றதாக ஆக்குகிறேன். அப்படியே...தேவன் நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டு, அல்லது பாப்டிஸ்டு, அல்லது கத்தோலிக்கரா அல்லது நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்று ஒருபோதும் கேள்வி கேட்பதில்லை. அது உங்களுடைய விசுவாசத்தினால் நீங்கள் சுகமடைகிறீர்கள்; உங்களுடைய விசுவாசத்தினால் நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள். 24 ஆனால் இப்பொழுது இது முற்றிலும் ஒரு பாப்டிஸ்டு உபதேசம் என்று நீங்கள் நினைக்க நான் விரும்பவில்லை வரங்களும், அழைப்பும் மாறாதவைகளே என்று நான் கூறும்போது, அவைகள் தேவனால் முன்குறிக்கப்பட்ட சித்தமாயிருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். 25 நான் ஒரு சிறு பையனாயிருந்தபோது இன்று நான் பிறந்திருந்த அந்தச் சிறிய அறையின் புகைப்படத்தை அந்தப் பெண்மணி தயாரித்தாள், அது மிகவும் அருமையாயிருந்தது. நான் பிறந்தபோது, இயற்கைக்கு மேம்பட்டவர் அறைக்குள் வந்தார், அங்கே உள்ள அந்த விளக்குகளில் ஒன்றின் அளவைப் போலவே. அது இந்நேரம் வரையிலும் என் ஜீவியத்தின் எல்லா நாட்களிலும் என்னைப் பின்தொடர்ந்தது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான்...எனக்கு முன்பிருந்த என்னுடைய ஜனங்கள் கத்தோலிக்கராயிருந்தனர். நான் தாய் தந்தையினுடைய அயர்லாந்தை சேர்ந்தவன்; அதற்காக மன்னிப்பு உண்டு. எனவே, நான் நான் நான்...யாரோ ஒருவர், "நீ அயர்லாந்துக் காரனாயிருக்கிறாய், கென்டக்கியிலிருந்து வந்திருக்கிறாய், ஓ என்னே, அது அதை மோசமாக்குகிறது" என்றார். எனவே நான்...ஆனால் தேவன் எனக்கு இரக்கமாயிருந்தார், அவர் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் என்னிலிருந்து ஒரு கிறிஸ்தவனை உண்டாக்கினார், நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அதன்பின்னர் நான் ஒரு கிறிஸ்தவனானபோது... 26 நான் ஒரு சிறு பையனாய் இருந்தபோது, ஒரு கிறிஸ்தவனாக மாறுவதற்கு முன்பு, இது என்னிடத்தில் வந்து, என்னிடத்தில் பேசும், நடக்கப்போகும் காரியங்களை என்னிடத்தில் கூறும். பாருங்கள், அது ஏறக்குறைய மரண பயத்தை ஏற்படுத்தும். நான் அதைக் குறித்து பதட்டமாகவும் நடுக்கமாகவும் இருப்பேன். ஆனால் அது...அது முதன்முதலில் ஒரு முட்செடியில், புதரில் காற்று சுழன்றுகொண்டிருந்ததைப் போல, என்னிடம் பேசினது, அது என்னிடத்தில் ஒருபோதும் மது அருந்தவோ, அல்லது புகைக்கவோ, அல்லது என்னுடைய சரீரத்தை கறைப்படுத்தவோ செய்யாதே என்றும், நான் செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கும் என்று என்னிடம் கூறியிருந்தது. வாழ்க்கை முழுவதும், நான் ஒரு நற்பண்புகொண்ட மனிதனாய் வாழ முயற்சித்து வந்திருக்கிறேன், நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன். என்னுடைய தகப்பனாரும் கூட நான் ஒரு பெரிய பெண்மைத்தன்மை கொண்டவன் என்று கூறினார், ஏனென்றால் நான் மற்ற பிரான்ஹாம்களைப் போல மற்றும் மற்றும் பலரைப் போலக் குடிப்பதில்லை. ஆனால் என்னுடைய இருதயத்தில் ஏதோ ஒன்று என்னைக் குடிக்கவிடவில்லை, அது கிறிஸ்துவாயிருந்தது. எனக்கு ஒரு கருத்து உண்டு, நான் இதன் பேரில் சரியாக இல்லாமலிருக்கலாம், ஜனங்கள் இதன் மூலம் நன்மையடை வேண்டும் என்பதற்காகத் தேவன் இதைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார் என்று நான் நினைக்கிறேன். என்னால் வேறு வழியைக் கண்டறிய முடியவில்லை, ஏனென்றால் சுபாவத்தின்படி நான் வேறு வழியில் இருந்தேன். எனவே, என்னுடைய ஜனங்கள் யாவரும் மது அருந்துவார்கள், அதுபோல இருந்தார்கள். நீங்கள் ஒரு தானிய மணியைப் பயிரிட்டால், அது ஒரு மஞ்சள் தானிய மணியாக இருந்தால், அது மஞ்சள் சோளத்தை உற்பத்தி செய்யும், பாருங்கள், ஆனால் இந்த நேரத்தில், ஒரு மனமாற்றம் உண்டாக்கப்பட்டாலொழிய, தேவன் அதைச் செய்தார். 27 எனவே அதன்பின்னர், அது-அது எனக்கு வந்து, என்னிடத்தில் பேசி, நடக்கப்போகும் காரியங்களை என்னிடத்தில் கூறுவார். பாருங்கள், நான் அதிலிருந்து விலகியிருந்தேன். என்னுடைய மனமாற்றத்திற்குப் பிறகு, என்னுடைய சொந்த சபை, பாப்டிஸ்டு சபை, நான் அதைச் சில ஊழியக்காரர்கள் போன்றவரோடு எடுத்துக் கூறினேன், அவர்கள் அதிலிருந்து விலகியிருக்கும்படி எனக்கு அறிவுரை கூறினர், "இதனோடு ஒருபோதும் எந்தச் சம்மந்தமும் வைத்துக் கொள்ள வேண்டாம், அது தவறானது. எனவே, உங்களுக்கு ஏதாகிலும் வந்தால்," என்று கூறினர், "நாங்கள்...அந்த இயற்கைக்கு மேம்பட்ட நாட்களில், அது மறுபுறத்தில் உள்ளது" என்றனர். "நாங்கள் வார்த்தையினால் பிழைக்கிறோம்" என்றனர். 28 எழுத்து கொல்லுகிறது, ஆனால் ஆவியோ ஜீவனை அளிக்கிறது என்பதை ஒரு நாள் நான் வாசித்தேன். எனவே நான்-நான் தள்ளிவிட முயற்சித்தேன். நான் அதை அடையாளம் கண்டுகொண்டேன், நான் அமர்ந்து, என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் அதைக் குறித்து பரிசீலிக்க முயற்சித்தேன், நான், "கர்த்தாவே, நான் தவறாயிருந்தால், என்னை மன்னியும்" என்றேன். அந்த நேரத்தில் அது அறைக்குள் வந்து, ஒரு மனிதன் என்னிடம் நடந்து வந்து, சற்றேறக்குறைய ஆறு அடி உயரம், ஆனால் ஒரு மாநிறமாயிருந்தார், அவருடைய தோள்பட்டை வரை கருமையான முடியோடு, ஏறக்குறைய இருநூறு பவுண்டுகள் எடையுள்ள மனித எடையுள்ளவராய், நான் வியாதியுள்ள ஜனங்களுக்காக ஜெபிக்கும்படிக்கு இந்த உலகிற்குக் கொண்டுவரப்பட்டேன் என்றும், நான் அவர்களை விசுவாசிக்க செய்தால் நான் ஜெபிக்கும்போது, அந்த ஜெபத்திற்கு முன் எதுவும் நிற்காது என்றும் கூறினார். 29 நான் அந்த மனிதனிடம் கேள்வி கேட்டேன், ஒரு காரணம் என்னவென்றால் நான் ஏழை, மேலும் கல்வியறிவில்லாதவன், நான் "ஜனங்கள் என்னை நம்ப மாட்டார்கள்" என்றேன். நான், "என்னால் ஜனங்களை என்னை விசுவாசிக்கச் செய்ய முடியாது" என்றேன். 30 நான் ராஜாக்களுக்காகவும், பேரரசர்களுக்காகவும், மற்றும் மற்றவர்களுக்கும் ஜெபிப்பேன் என்றும் அவர் என்னிடம் கூறினார்; அதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு இலக்கணப் பள்ளிக் கல்வியறிவு பெற்றிருந்த ஒரு பையன், ராஜாக்களுக்காகவும், ஏகாதிபதிகளுக்காகவும்-ஜெபிப்பதை, என்னால் அதை நம்பவே முடியவில்லை. அதே சமயத்தில் அவர் என்னிடம் தவறாக எதையும் கூறவில்லை என்பதை நான் அறிவேன், ஆனால் அவர் அருகில் நின்றுகொண்டிருந்தார். நான் சத்தத்தைக் கேட்டேன், அடையாளங்களைக் கண்டேன். 31 ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியானாவில் உள்ள ஜெபர்ஸன்வில்லில் என்னுடைய எழுப்புதல் கூட்டத்திற்குப் பிறகு, என்னுடைய முதல் குழுவிற்கு நான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன், இந்த நேரத்தில் நான் வாழ்ந்த இடம், என் வீடு, சரியாகக் கூறினால், ஓஹையோ ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தனர், அங்கு... [ஒலி நாடாவில் காலியிடம்)...கூடி இருந்தனர். நான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஜூன் மாதம், பிற்பகல் இரண்டு மணி, பதினேழாவது நபருக்கு நான் ஸ்பிரிங் தெருவின் அடிவாரத்தில் உள்ள ஓஹையோ நதியில் தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது ஏதோ ஒன்று பேசுவதை நான் கேட்டேன், மேலும் ஏதோ ஒன்று என்னைப் பற்றிக் கொண்டதை நான் உணர்ந்தேன். நான் மேலே நோக்கிப் பார்த்தேன், நான் அவ்வாறு பார்த்தபோது, மகிமையிலிருந்து இந்தச் சுழற்காற்று நான் இருந்த இடத்திற்கு கீழே இறங்கி வந்தது. 32 கூரியர் ஜர்னல் செய்தித்தாளில் அதைக் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது, "ஒரு உள்ளூர் பாப்டிஸ்டு போதகர் ஆற்றில் ஞானஸ்நானம் கொடுக்கும்போது, ஒரு தெய்வீக நட்சத்திரம் தோன்றுகிறது" என்று கூறப்பட்டிருந்தது. அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஓ, நான் இருந்த இடத்திற்கு அது நகர்ந்து வந்து, பின்னர் ஆகாயத்திற்குத் திரும்பிச் சென்றபோது, அநேகமாகப் பத்தாயிரம் பேர்வரை அதைக் கண்டிருக்கலாம், நான் இருந்த இடத்திற்கே வந்து மீண்டும் ஆகாயத்தை அடைந்தது. பாருங்கள், நான்...அது என்ன பொருட்படுத்துகிறது என்று அநேகர் என்னிடத்தில் கேட்டனர், அப்பொழுது நான், "எனக்குத் தெரியாது" என்றேன். 33 ஆனால் அதன்பின்னர் இது வந்தபோது, அவர் என்னிடத்தில் கூறினார்...இந்த முறை அவர் பார்த்தபோது, அவர் ஒரு மனிதனாயிருந்தார். ஜனங்கள் என்னை விசுவாசிக்கமாட்டார்கள் என்று நான் பயந்தேன் என்று நான் அவரிடம் கூறியபோது, தீர்க்கதரிசி மோசேயை ரூபகாரப்படுத்த கொடுக்கப்பட்டது போல, எனக்கும் இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார், அல்லது வேறு வார்த்தைகளில் கூறினால், ஜனங்களாகிய உங்களுக்கு, அல்லது நான் உண்மையைக் கூறிக்கொண்டிருக்கிற மற்ற ஜனங்களுக்குத் தெளிவுபடுத்தலாம். பார்த்தீர்களா? அதுதான். 34 இப்பொழுது, மனிதர்கள் எந்தக் காரியத்தையும் கூறலாம், ஆனால் அது உண்மையென்று தேவன் திரும்ப உரைக்கவில்லையென்றால், அப்பொழுது அது உண்மையல்ல; ஆனால் அது உண்மையென்று தேவன் சாட்சி பகரந்தால், அப்பொழுது நான் அதை விசுவாசிப்பேன்; தேவன் அவ்வண்ணமாய் கூறியிருந்தால், நான் அதை விசுவாசிப்பேன். இப்பொழுது, அது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 35 நான் முதலில், ஒரு நபரின் கரத்தைப் பிடிப்பதன் மூலம் நோய்களை அறிந்து கொள்வேன் என்று அவர் என்னிடம் கூறினார். நான் பயபக்தியாயிருந்து, மேலும்-மேலும் தொடர்ந்து சென்றால், அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஜனங்கள் தங்களுடைய கடந்த வாழ்க்கையில் செய்த காரியங்களை அறிந்துகொள்ளவும், அவர்களுக்கு முன்பாக என்ன நடக்கும் என்பதை அவர்களிடம் சொல்லவும் முடியும் என்று கூறினார். 36 அதன்பின்னர் நான் ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்த்தபோது, நாசரேயனாகிய இயேசுவைக் குறித்து நான் அநேக முறை கூறுகிற வேதவாக்கியங்களை அவர் குறிப்பிட்டுக் கூறினார், அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார் என்பதை அறிந்து, நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவேன் என்பதையும் நான் அறிந்து கொள்ளும்படி செய்தார்; நான் அநேகரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். ஆனால் அநேகர் செய்தியை விசுவாசித்திருப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இயேசு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். 37 ஒரு சமயம் யாரோ ஒருவன் அவரிடத்தில் வந்தான், நாத்தான்வேல் தன்னுடைய சகோதரனை அழைத்து, அங்கே தான் இந்தத் தூதன் குறிப்பிட்டுக் கூறினான் இல்லை இல்லை, பிலிப்பு சென்று நாத்தான்வேலை அழைத்து வந்தான், அவன் வந்தபோது, இயேசு, "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்!" என்றார். அவன், "ரபீ, நீர் என்னை எப்பொழுது அறிவீர்?" என்று கேட்டான். அவர், "பிலிப்பு உன்னை அழைக்கும் முன்னே, நீ மரத்தின் கீழ் இருந்தபோது" என்றார். 38 அவனுடைய இருதயத்தைக் கவனியுங்கள். இப்பொழுது, அவன் பின்வாங்கி, "இதற்கு ஏதோ ஒருவிதமான தந்திரம் உண்டு" என்று கூறியிருக்கலாம். அவன் பெற்றிருந்த ஆசீர்வாதத்தை அவன் ஒருபோதும் பெற்றிருக்கமாட்டான். ஆனால் அவன், "நீர் கிறிஸ்து, தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா" என்றான். அவன் விழுந்து அவரைப் பணிந்துகொண்டு, தேவனுக்கு துதி செலுத்தினான். இயேசு தம்மை தாமே உரிமைக் கோரியவராயிருந்தார் என்று அவனுக்கு ரூபகாரப்படுத்திய பிறகு, அவனுடைய இருதயம் பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்தது. அதன்பின்னர் ஒரு சமயம் கிணற்றண்டையில் ஒரு ஸ்திரீ அவரிடத்தில் வந்தாள். அவளுடைய ஆவியோடு தொடர்பு கொள்ள அவர் அவளிடத்தில் சிறிது நேரம் பேசினார், அவர் அவளிடத்தில், "போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா" என்றார். அவள், "எனக்குப் புருஷன் இல்லை" என்றாள். அதற்கு அவர், "நீ நன்றாகக் கூறினாய், உனக்கு ஐந்து பேர் உண்டு, இப்பொழுது உனக்கு இருக்கிறவன் உன் புருஷன் அல்ல" என்றார். 40 மேலும், "நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்" என்றாள், அதுபோல. அவள் சென்று தன்னுடைய ஜனங்களிடத்தில், "நான் செய்த ஒவ்வொரு காரியத்தையும் எனக்குக் கூறின ஒரு மனிதனை வந்து பாருங்கள்" என்று கூறினாள். அவள் சற்று உணர்ச்சிவசப்பட்டவளாய் இருந்தாள், அவர் எல்லாக் காரியங்களையும் அவளிடத்தில் ஒருபோதும் கூறவில்லை, ஆனால் அவர் அறிந்திருந்தார்... இப்பொழுது இதைக் கவனியுங்கள்: இயேசு அதை அறிந்திருந்தாரா, அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருந்தார் என்று அவள் அறிந்திருந்தாள். பார்த்தீர்களா? அது உண்மை. அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருந்தார், அவர் அதை அறிந்திருந்தால், தேவனால் அவருக்கு வெளிப்படுத்த முடியும். 41 இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், என்னுடைய அருமையான கிறிஸ்தவ நண்பரே, தேவனுடைய இராஜ்ஜியத்தின் உடன் குடிமகனே, இயேசுவானவர் பூமியில் இருந்தபோது, அவர் தமக்குள் ஒன்றையுமே செய்யவில்லை என்று சாட்சி பகர்ந்தார், பிதாவானவர் தரிசனத்தின் மூலம் அவருக்குக் காண்பித்ததை மாத்திரமே அவர் செய்தார். அது உண்மையா? அது உண்மை. பார்த்தீர்களா? பிதாவானவர் அவருக்குக் காண்பித்ததின் மூலம் மாத்திரமே. பார்த்தீர்களா? அவர், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்" என்றார். 42 லாசரு மரித்தபோது நீங்கள் கவனித்தீர்களா? இயேசு, அவர்கள் லாசருவுக்காக ஜெபிக்கும்படி அவரை அழைத்தனர், அவர் வரவில்லை, அவர் தொடர்ந்து சென்றார். ஏன் என்று வியப்புறுகிறேன். லாசரு மரிக்க வேண்டியதாயிருந்ததை அவர் தரிசனத்தில் கண்டார். ஆகையால் அவர் தொடர்ந்து சென்றபோது, நீங்கள் வேதவாக்கியங்களை கூர்ந்துக் கவனிப்பீர்களேயானால், அவர் தொடர்ந்து சென்றார், அவர்கள் மறுபடியும் அனுப்பினார்கள், அவர் வரவேயில்லை, மேலும் தொடர்ந்து சென்றார். அதன்பின்னர் அவர்...சிறிது நேரம் கழித்து அவர், "நம்முடைய நண்பனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்" என்றார். அல்லது, "அவன் மரித்துவிட்டான்" என்று அவர் அவர்களிடம் தெளிவான வார்த்தைகளில் கூறினார். எனவே அவர், "ஆனால் உங்கள் நிமித்தமாக, நான் அங்கு இல்லாததற்காக மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் நான் போய் அவனை எழுப்புவேன்" என்றார். 43 இப்பொழுது, பரிசுத்த யோவான் 5:19-ல் உள்ள அவருடைய வார்த்தைகளின்படி, என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை பிதா ஏற்கனவே அவருக்குக் காண்பித்திருந்தார், ஏனென்றால் அவர், "பிதாவானவர் அவருக்குக் காண்பிக்கிறதைத் தவிர வேறொன்றையும் குமாரன் செய்ய முடியாது" என்றார். அது சரியா? கல்லறையிலே அவருடைய ஜெபத்தைக் கவனியுங்கள். அவர், "அந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்" என்றார். ஆனால் அவன் எழுப்பப் போவதாயிருந்தால், ஏன் அந்தக் கல்லை எடுத்துப் போட வேண்டும்? நீங்கள் பாருங்கள், ஸ்திரீகள் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அவர், "கல்லை எடுத்துப் போடுங்கள்" என்றார். 44 மேலும் அவர், "பிதாவே, நீர் ஏற்கனவே எனக்குச் செவி கொடுத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் சுற்றிலும் நிற்பவர்களுக்காக நான் அதைக் கூறினேன்" என்றார். ஒரு வழக்கமான ஜெபம், எப்பொழுதுமே...அவர்கள் அதை அறிந்து கொள்ளும்படியாக, அப்பொழுது அவர் லாசருவை மரித்தோரிலிருந்து அழைத்தார். 45 இப்பொழுது, அதுவே...நம்முடைய போதகர் அந்தக் காரியங்களைச் செய்வதிலும், அந்த முன்னறிவிப்புகளிலும், பிதாவானவர் அவருக்குக் காண்பித்ததை மாத்திரமே கூறி, மாத்திரமே...ஒரு முறை இரண்டு கோவேறு கழுதைகள் கட்டப்பட்டிருந்ததை அவர் அறிந்திருந்தார்; அங்கே மேலறை ஆயத்தமாயிருக்குமென்றும், ஒரு மனிதன் ஒரு குடத்தை சுமந்து கொண்டிருப்பான் என்றும் அவர் அறிந்திருந்தார். 46 பாருங்கள், நான் ஒரு மரித்துப்போன ஆவிகளுடன் தொடர்பு கொண்டுள்ளவன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன், நான் ஒரு ஆவியுலக இடையீட்டாளர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். யாரோ ஒருவர் அன்றொரு நாள் என்னிடத்தில்..."நீங்கள்... சேர்ந்தவரா" என்று கேட்டார். 47 இந்தச் சபைக்கு "நான் இருக்கிறேன்" அல்லது அது போன்ற பெயரில் ஒரு குழுவினர் எப்போதாவது உரிமையாளராக இருந்தார்களா? நான் இருக்கிறேனா என்று யாரோ என்னிடம் கேட்டார்கள்." நான், "இல்லை, அவர் இருக்கிறார், நான் அவருடைய ஊழியக்காரன்" என்றேன். அப்பொழுது அவர், "நான் இருக்கிறேன்" என்று சொல்பவர்கள் இருந்த இடத்தில் மேலே நீங்கள் ஒரு கூட்டம் நடத்தவில்லையா?" என்று கேட்டார். நான், "நான் இருக்கிறேன் என்பது இன்னமும் அங்குள்ளது" என்றேன். நான் இருக்கிறேன், அது நம்முடைய கர்த்தராகிய இயேசு, நம்முடைய-நம்முடைய தேவன், அவருடைய பிதா, "நான் இருக்கிறவராக இருக்கிறேன்." 48 இப்பொழுது, அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது, அருமையான கிறிஸ்தவ நண்பனே, தேவனுடைய கிருபையினால், நான் நான் நான் அவர்களில் ஒருவரும் அல்ல, நான்-நான் உங்களுடைய சகோதரன், நான் உங்களுடைய சகோதரன். மேலும் நான் ஆர்ப்பாட்டக்காரனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு பெரிய, சக்திவாய்ந்த போதகரைப் போல என்னால் தகர்க்கவும், கட்டியெழுப்பவும், உலுக்கவும் முடியாமல் இருக்கலாம், நான் அவ்வாறு உரிமை கோரவில்லை. என்னுடைய கூச்ச சுபாவத்தை, என்னால் அதைத் தவிர்க்க முடியாது, அந்தவிதமாகத்தான் தேவன் என்னைச் சிருஷ்டித்தார், நான்-நான் இருக்கிற விதமாகவே இருக்க வேண்டும். அவ்வளவுதான். அந்தவிதமாகவே நான் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், அந்தவிதமாகத்தான் நானும் இருக்க வேண்டும். அவர் கூறுகிறபடியே நான் செய்கிறேன். முதலாவதாக, அது என்னைப் புண்படுத்தும்... 49 அண்மையில் ஒரு சமயம் க்ளீவ்லேண்டில் நடந்த ஒரு கூட்டத்தில், அங்கே ஒரு கறுப்பினத்தவர் நடந்து வந்து, "என்னுடைய குறிசொல்லுதலைக் கூறுவதற்காக நான் ஒரு ஜெப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாமா?" என்று கேட்டார். 50 ஓ, என்னே! என்னைப் பொறுத்தவரையில், அது...இந்த ஏழை சகோதரனுக்கு எதிராகத் தேவன் அதை வைத்திருக்கமாட்டார் என்றும் நான் நான் ஜெபிக்கிறேன், அவன் குடித்துக் கொண்டிருந்தான், ஆனால் அவன்-அவன்...தேவன் அவ்வாறு செய்யமாட்டார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் பாருங்கள், அங்கே பரிசுத்த ஆவியை நீங்கள் தூஷிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பார்த்தீர்களா? 51 நண்பர்களே, தேவனிடம் உள்ள எதையும் பின்பற்றுவதற்கோ அல்லது போலியாகக் காட்டுவதற்கோ சாத்தானிடம் ஏதோ ஒன்று இருக்கிறது, அவனுக்கிருந்த எல்லாக் காரியங்களையும், அவன் அதனோடு தேவனைப் போலப் பாவனை செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால் எங்கே ஒரு-ஒரு பொய் இருக்கிறதோ, அதை அடிப்படையாகக் கொண்டு எங்காவது ஒரு உண்மை இருந்தாக வேண்டும், இல்லையென்றால் அது பொய்யாயிருக்காது. அது சரியா? நீங்கள் ஒரு போலி டாலர் வைத்திருந்தால், பாருங்கள், எங்காவது ஒரு ஒரு உண்மையான டாலர் இருக்க வேண்டும், அல்லது அது அப்படியில்லாவிட்டால், அதுவே அசல், பாருங்கள், அது போலியானது அல்ல. 52 ஆனால் இயேசுவும் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவர்கள் அவரைப் பெயல்செபூல் என்று அழைத்தனர்: ஒரு பெயல்செபூல்: குறி சொல்பவன், அல்லது பிசாசு. பெயல்செபூல் ஒரு பிசாசு என்பதை நீங்கள் அறிவீர்களா? பிசாசுகளின் பிரபு. அவர்கள் அவருடைய கிரியையைக் குறித்தும், அவருடைய- அவருடைய செய்கைகளினூடாக அவரால் முன்னுரைக்கப்பட்ட காரியங்களையும், சம்பவிக்கப்போகும் காரியங்களைக் காண முடிந்தது, அவர் பிசாசுகளைத் துரத்தினார், அது பிசாசுகளின் பிரபுவாகிய பெயல்செபூலின் வல்லமையினால் துரத்தப்பட்டது. அவருடைய வல்லமை எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் மேலானது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அவர் எந்தத் தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஏனென்றால் அவர் அறிந்தும் புரிந்தும் இருந்தார், பிதாவானவர் அவரோடு இருந்தார், அவர் உரிமை கோரினது போன்ற காரியங்கள், இயேசு கூறிக்கொண்டிருந்தது உண்மையென்று தேவன் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் வெளிப்புற மதசம்பந்தமான உலகம், மதசம்பந்தமான உலகம், "அவன் பெயல்செபூல், அவன் பிசாசுகளின் பிரபு மூலமாய் பிசாசுகளைத் துரத்தினான்" என்று கூறினது. 53 ஆனால் நீங்கள் கவனித்தீர்களா? பிசாசுகள் அவரைச் சந்தித்தபோது, அவைகள், "நீர் யாரென்று அறிந்திருக்கிறோம், நீர் தேவனுடைய குமாரன்" என்றன. அது உண்மை. அவைகள் அவருடைய அதிகாரத்தை அங்கீகரிக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, "வீட்டு எஜமானை பெயல்செபூல் என்று அவர்கள் அழைப்பார்களானால், அவருடைய சீஷர்களை அவர்கள் எவ்வளவு அதிகமாய் அழைப்பார்கள்?" நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? 55 மேலும் நான்-நான் இங்குத் தவறு செய்ய வந்தேன் என்ற எண்ணத்தை யாருக்கும் ஏற்படுத்தியிருக்க மாட்டேன் என்று நம்புகிறேன். நான்-நான் ஒரு வஞ்சகனாயிருக்க முயற்சிப்பதைக் காட்டிலும் வீட்டிற்குச் சென்று முயற்சி செய்யாமல் இருப்பதையே விரும்புவேன். 56 அன்றொரு இரவு இக்கட்டிடத்தில் யாரோ ஒருவர் இருந்தார், நான் ஒரு வஞ்சகனாயிருந்தேன் என்ற, ஒரு மகத்தான, பலமான உணர்வு உண்டாயிருந்தது. எனவே நான் அதை அறிந்திருந்தேன், நான் அதைக் குறித்து என்னுடைய மகனிடத்தில் கூறினேன். இன்றைக்கு ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு பெண்மணியினிடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, என்னுடைய பையன் கீழ்நோக்கிப் பார்த்து, "அப்பா, அங்கே பாருங்கள். நீங்கள் என்ன..." என்றான். நான், "நிச்சயமாக. அது வரப்போகிறது என்பதை நான் அறிந்திருந்தேன், பாருங்கள், ஏனென்றால் அது வரப்போகிறது என்று அவர் எனக்குக் காண்பித்தார்" என்றேன். அதற்கு நான், "அன்றொரு இரவு அவர் அங்கிருந்தார்" என்றேன். 57 அங்கே பின்னால் அமர்ந்திருந்த மனிதனிடத்தில், "நான் ஒரு வஞ்சகன் அல்ல" என்று நான் கூறினதை நீங்கள் கேட்டீர்களா? அவர் அப்படி நினைத்தார் என்பதை நான் அறிவேன், நான் ஒரு போலியானவன் என்று கூறினார். பாருங்கள், நான் ஒரு போலியானவனானால், நான் தவறென்று நிரூபிக்க வாருங்கள், அது-அது உண்மை. பார்த்தீர்களா? 58 நான் நான்-நான் ஒரு கிறிஸ்தவனாயிருக்கிற உங்களைப் போலவே, கர்த்தருடைய ஊழியக்காரனேயல்லாமல் வேறொன்றுமில்லை. பார்த்தீர்களா? நான் எனக்குள்ளாக ஒன்றையும் செய்ய முடியாது, கர்த்தர் எனக்குக் காண்பிக்கிறதை மாத்திரமே, என்னால் செய்ய முடியும், அவர் எனக்குச் செய்யும்படி காண்பிக்கிறதைத் தவிர வேறெதையும் என்னால் செய்ய முடியாது. இந்தத் தரிசனங்களில், அவர் நிறைவேறப்போகும் காரியங்களை எனக்குக் காண்பிக்கிறார், ஜனங்கள் செய்திருக்கிற காரியங்களை எனக்குக் காண்பிக்கிறார். 59 முதலாவதாக, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள், அல்லது, இரண்டு ஆண்டுகளுக்குச் சற்று அதிகமான, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள், நான் ஒரு நபருடைய கரத்தைப் பிடித்தபோது, அது ஒரு விநோதமான தோற்றத்தைக் காண்பிக்கும் என்று என்னால் கூற முடிந்தது. அது ஒரு சிறு குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை தேவன் ஒருவேளை அறிந்திருக்கலாம். அது சரியாக இருக்குமானால், என்னுடைய இருதயத்திலிருந்து நான் ஒன்றைக் கூறலாமா? பார்த்தீர்களா? அநேக ஜனங்கள் புறப்பட்டுச் சென்று, அதன்பின்னர் தங்களுடைய கரங்களில் விசித்திரமான உணர்வுகளை உடையவர்களாயிருந்தனர் என்பதை, நீங்கள் அறிவீர்கள், நீங்கள் உங்களுடைய கரத்தில் கொண்டிருந்த ஒருவிதமான உணர்வின் மூலம் நீங்கள் ஜனங்களைச் சுகப்படுத்துகிறீர்கள் என்று நினைத்து அவர்கள் தவறான எண்ணத்தைப் பெற்றுள்ளனர். அநேகர் என்னிடத்தில் வந்து, "சகோதரன் பிரான்ஹாம், எனக்குச் சுகமளிக்கும் வல்லமை இருக்கிறதா என்று உணர்ந்து பாருங்கள்" என்று கூறுவார்கள். 60 இல்லை, நான் இப்பொழுது உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் பெற்றிருக்கவில்லை. ஒரே சுகமளிக்கும் வல்லமை இயேசு கிறிஸ்துவுக்குள் உள்ளது. அது உண்மை. அவ்வளவுதான். அவ்வளவுதான்! நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் ஜனங்களுக்கு அதைச் சுட்டிக்காட்டுவதேயாகும். என்னால் செய்யக்கூடியதெல்லாம், அல்லது வேறு யாராலும் செய்யக்கூடியதெல்லாம், ஜனங்களை ஏற்கனவே சுகமாக்கியிருக்கிற இயேசு கிறிஸ்துவினண்டைக்கு அவர்களைச் சுட்டிக்காட்டுவதேயாகும். அவர் கல்வாரியில் மரித்தபோது, அவர் உன்னத கிரயத்தை செலுத்தினார். அவர் செலுத்தினார்... அவர் கல்வாரியில் மரித்த மீட்பின் ஆசீர்வாதங்கள் யாவும் தேவனுக்கு முன்பாக ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன, கடன் முழுவதுமாகச் செலுத்தப்பட்டு, தேவனுக்கு முன்பாக நீங்கள் மன்னிக்கப்படுகிறீர்கள், நீங்கள் அடகுக் கடையிலிருந்து வெளியே எடுக்கப்படுகிறீர்கள். அது உண்மை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம், கிறிஸ்துவில் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, அடகு கடையை விட்டு வெளியே நடப்பதேயாகும், அவ்வளவுதான். 61 அவரே நம்முடைய இனத்தான் மீட்பர். அது சரிதானே? தேவன் நமக்கு ஒரு இனத்தானாயிருக்க, நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள மாம்சத்தில் வெளிப்பட்டார். ரூத், ஆதியாகமம் போன்ற புத்தகங்களில், நாம் எப்படி தேவனுக்கு உறவினராகிறோம் என்பதை அது எப்படிப் பிரசங்கிக்கிறது, போதிக்கிறது, தேவன் இறங்கி வந்து, தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் வாசம் செய்து, நமக்கு நெருங்கின உறவினரானார். அவர் நம்முடைய இனத்தான் மீட்பர். இஸ்ரவேலருக்கு முன்பாக வாசல்களில் ஒரு பகிரங்கமான சாட்சி கூறப்பட வேண்டியதாயிருந்தது, போவாஸ் நகோமியை உறுதியாய் மீட்டுவிட்டான் என்பதைக் காண்பிக்க தன்னுடைய காலணிகளைக் கழற்றினான், நகோமியை மீட்டதில் அவன் மணவாட்டியாகிய ரூத்தை அடைந்தான். 62 இயேசு, அவர் இஸ்ரவேலை மீட்டபோது, அவர் புறஜாதி மணவாட்டியை உடையவராயிருந்தார். அவர் பகிரங்கமான ஒரு சாட்சியைக் கூறினார்: அவர் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே, வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஒரு கொடியாக உயர்த்தப்பட்டார். அங்கேதான் உயர்ந்த கிரயம் செலுத்தப்பட்டது, அங்கேதான் நாம் மீட்கப்பட்டோம். மேலும், இழக்கப்பட்ட நமது எல்லா பாரம்பரியமானவையும், நம்முடைய ஆரோக்கியம், நம்முடைய பெலன், நம்முடைய இரட்சிப்பு, அங்கே இழக்கப்பட்டிருந்த யாவையும் கல்வாரியில் மீட்கப்பட்டது. இதோ அது உள்ளது. 63 என் சகோதரனே, சகோதரியே, நீங்கள் எவ்வளவு கிருபையாக ஜெபிக்க முடியும் அல்லது நீங்கள் எவ்வளவு தவம் செய்ய முடியும் என்பது அல்ல, அவர் அதை உங்களுக்காகச் செய்திருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டிய உங்களுடைய விசுவாசம் தான் உங்களைப் பிறப்பிக்கிறது. அது உண்மை. ஒவ்வொரு பாவியும் இன்றிரவு யேகோவா தேவனின் பார்வையில் இரட்சிக்கப்படுகிறான், ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசித்து, அதை அறிக்கையிடும் வரை அது உங்களுக்கு எந்தப் பயனும் செய்யாது, தேவனுக்கு முன்பாக உங்கள் அறிக்கையைச் சரிப்படுத்த அவரே பிரதான ஆசாரியராய் இருக்கிறார். 64 எந்த மீட்பின் ஆசீர்வாதங்களும், நீங்கள் சோர்ந்து போயிருந்தால்: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்: நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." அது ஏற்கனவே முடிந்துவிட்டது, நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். 65 இப்பொழுது, ஒரு ஊழியக்காரன் வார்த்தையை எடுத்து அதை விளக்க முடியும். நான் கல்வியறிவற்றவன், நான் வார்த்தையைக் குறித்து அதிகமாக அறிந்திருக்கவில்லை, இரட்சிப்பின் திட்டத்தையும், தேவன் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிற காரியங்களையும் மாத்திரமே அறிந்திருக்கிறேன். அது வேதபாட கருத்தரங்கினாலோ அல்லது போதகங்களினாலோ ஒருபோதும் வரவில்லை, அது ஆவியின் வெளிப்பாட்டினால் மாத்திரமே உண்டானது. நான் அறிந்துள்ளதை, தேவன் அதை எனக்கு அளித்தார் என்பதை நான் அறிவேன். அதன்பின்னர், வார்த்தையைக் குறித்து அதிகம் அறியாததால், நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன் என்பதை ஜனங்களாகிய உங்களுக்கு ஒரு உறுதிப்படுத்துதலாக இருக்கக்கூடிய இந்த மற்ற காரியங்களை அவர் அருளினார். 66 தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்...நான் இலட்சக்கணக் கானவர்களுக்கு முன்பாகப் பிரசங்கித்திருக்கிறேன், ஆனால் இதனோடு எனக்கு ஏதாவது சம்பந்தம் உள்ளது என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. அந்த எல்லா மகிமையும் அங்கே உங்களை மீட்டத், தேவ குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவுக்கே செல்கிறது. அவர் பேசுகிற, கூறுகிறபடியே என்னால் பேசவும், கூறவும் முடியும். மேலும் நான் நம்புகிறேன், இன்றிரவு நான் இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறி, இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டேன் என்றால், நான் நம்புகிறேன், இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஜனங்களாகிய நீங்கள் சாட்சி அளிக்க வேண்டியிருக்கும், தேசத்திலோ அல்லது தேசத்திற்கு வெளியிலோ எங்காவது அதை அறிந்துள்ள நோயாளி ஒவ்வொரு முறையும், நான் ஒரு நோயாளியுடன் அமரும்போது, அவர்கள் யார், எப்போது, எங்கே என்பது ஒரு பொருட்டல்ல... 67 அன்றொரு நாள் இங்கே பூங்காவில் நான் சந்தித்த அந்தப் பெண்மணியைப் போல, அவள் பூங்காவின் வழியாக வந்துகொண்டிருந்தாள், அவள் இல்லினாய்ஸிலிருந்து வந்திருந்தாள், அவள் மிகவும் சுகவீனமாயிருந்தாள், அவள் பூங்காவைக் கடந்து வந்தபோது, அவள், "ஓ, சகோதரன் பிரான்ஹாம்" என்றாள், அவள் அங்குச் செல்லத் துவங்கினாள், நான் அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்தேன். அங்கே பரிசுத்த ஆவியானவர் திரும்பிச் சென்றார் (அவள் இப்பொழுது இருக்கலாம், அவள் இருக்கிறாள் என்று நான் யூகிக்கிறேன்.), திரும்பிச் சென்று, அங்கே பூங்காவில் அமர்ந்து, அவளுடைய வாழ்க்கை முழுவதிலும், பாருங்கள், ஏறக்குறைய... 68 நோயாளியின் பிரச்சனை என்ன என்பதையும், அவர்களின் கடந்தகால வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் அது துல்லியமாகச் சொல்லாத ஒரு தருணத்தைக்கூட நீங்கள் யாரும் பார்த்ததில்லை. அது சரிதானே? மேலும் அது...அது உண்மை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? இப்பொழுது உங்கள் கரங்களை ஒரு ஒரு ரூபகாரப்படுத்துதலாக உயர்த்துங்கள். பார்த்தீர்களா? இப்பொழுது, அது சுகப்படுத்துகிறதில்லை, அது ஒரு ரூபகாரப்படுத்துதலாய் உள்ளது, இயேசு கிறிஸ்து பிரசன்னமாயிருக்கிறார் என்று பாருங்கள். 69 கடந்த இரண்டு இரவுகளில், நண்பர்களே, நாம் ஜனங்களை அவர்களுடைய சொந்த விசுவாசத்தின் பேரில் தளர்வுறச் செய்து, அவர்களை இங்கே கொண்டு வந்து, மேலும் நான் இங்கே நின்று முன்முயற்சி எடுக்க முயற்சித்திருக்கிறேன், மற்றும், ஜனங்கள் வரும்போது, அவர்களிடத்தில் பேசுவதை நிறுத்தி, ஆனால் அவர்களுக்காக ஜெபித்து, அவர்களை இங்கே கடந்து செல்ல செய்ய வேண்டும், தேவன் நமக்காக அற்புதங்களைச் செய்திருக்கிறார். நான் அதன் பேரில் மகிழ்ச்சியும், சிலிர்ப்புமடைகிறேன், ஏனென்றால் என்னால் அதிகமான ஜனங்களைச் சந்திக்க முடிகிறது. வழக்கமாக அவர்களை ஒருவர் பின் ஒருவராக, ஒருவர் பின் ஒருவராக அழைத்துக்கொண்டால்...தகுந்த அளவு ஆட்களைக் கொண்டு வருவதற்கு அவ்வளவு நேரம் பிடிக்கிறது. ஆனால் இப்பொழுதோ ஒவ்வொரு இரவும் ஐம்பது பேரை எடுத்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு நான் சென்று கொண்டிருக்கிறேன். மேலும், இந்த வாரத்திற்கு முன்பாக, அடுத்த வாரத்தில், நான் ஒவ்வொரு இரவும் நூறு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களை எடுத்துக்கொள்வேன் என்று நினைக்கிறேன். தேவனால் முடியும் என்று நான் நம்புகிறேன்... 70 நீங்கள் ஒவ்வொருவரும் இங்கு வரும்போது, உங்களுடைய நிலைமையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் இயேசுவை உங்களுடைய தனிப்பட்ட சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டு, நீங்கள் குணமடைவதை உணர்வதற்கு முன்போ அல்லது வேறு எதற்கும் முன்போ, விசுவாசத்துடனும், சாட்சியுடனும், உங்கள் சுகமளித்தலை உரிமை கொண்டாடியபடியும் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 71 இப்பொழுது, நேற்றிரவு பார்வையற்றிருந்த அந்த வயோதிகப் பெண்மணியை, அவர்கள் அந்தப் பரிதாபமான வயோதிகனை மேடையில் கொண்டு வந்து, அப்படியே...நிச்சயமாகவே, அபிஷேகம் மிகவும் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்தது, அவள் வரிசையின் முதல் வரிசையில் சரியாக இருந்தாள். நான், 'அவளை அமரச் செய்யுங்கள்" என்றேன், இன்னும் ஒரு சில நிமிடங்களில் நான் அவளிடம் வரலாம் என்று நினைத்தேன். அவள் குருடாயிருந்ததை நான் கண்டேன், பொருட்களில் மோதிக்கொண்டிருந்தாள், மேலும்-மேலும் அவர்கள் அவளைக் கீழே உட்கார வைக்க முயன்றனர். அவள் அவ்வழியாக வந்தாள், நான் என்னுடைய கரங்களை அவள்மீது வைத்து அவளை ஆசீர்வதித்தேன். அவள் கடந்து செல்லத் துவங்கினபோது, ஆவியானவர் அவளைத் திருப்பினபோது, அது என்னைச் சுற்றி இழுத்து, அப்பொழுது அது முடிந்துவிட்டதை நான் அறிந்திருந்தேன், அங்கே அவள் தன்னுடைய பார்வையைப் பெற்றாள். அவள் அங்கே பின்னால் உட்கார்ந்து படித்துக்கொண்டு, அதுபோன்ற காரியங்களை செய்து கொண்டிருக்கிறாள் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். தேவன் எப்படியாய் அவளை ஆசீர்வதித்திருந்தார்! நாம் எவ்வளவு நன்றியுள்ளவர் களாய் இருக்கிறோம்! 72 காதுகேளாதவர்களாயிருந்து வந்துள்ள மற்றவர்களும், ஊமையாக இருந்த சிலரும், இந்தக் கூட்டத்தில் எல்லா விதமான வியாதிகளும் சுகமாக்கப் பட்டிருக்கின்றன. இப்பொழுது, நாம் மகத்தான காரியங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கே சுகவீனமாக ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ள ஒரு சிறு பெண்மணியை நான் காண நேர்ந்தது. இப்பொழுது, தேவன் எல்லோர் மேலும் இரக்கமாயிருப்பாராக. 73 இப்பொழுது, நாம் நம்முடைய ஜெப வரிசையைத் தொடரும்படியாக, நான் இப்பொழுது சில வேதவாக்கியங்களை துரிதமாக வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் ஜெபிக்கப்பட ஆயத்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தீர்களா? ஓ, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 74 நம்முடைய வாசலில் அந்நியர்களாக இருக்கிறவர்கள், வியாதிகளின் இயற்கைக்கு மேம்பட்ட பகுத்தறிதலை நீங்கள் ஒருபோதும் கண்டிருக்கமாட்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை அவர் அந்த வரிசையில் யாரையாவது பிடித்துக் கொள்வார், அல்லது யாராவது என்னிடம் என்ன கோளாறு என்று கேட்பார், அல்லது அவர்களுடைய ஜீவியத்தில் அதைப் போன்ற ஏதோ ஒரு காரியம்; யாராவது பாவமுள்ள மேடையின் வழியாகக் கடந்து செல்லலாம், அவர் என்னை அங்கே அழைத்து அதை நிறுத்தலாம், பாவமுள்ள யாரோ ஒருவர் மேடையின் வழியாகக் கடந்து செல்லலாம், அவர் என்னை அங்கே அழைத்து, அதை நிறுத்தலாம். வழக்கமாக, அவர்கள் கூட்டத்திற்கு வந்தபிறகு, அழைக்கப்பட்ட அநேக காரியங்களைக் கண்ட பிறகு, அவர்கள் மேடைக்குச் செல்வதற்கு முன்பு வழக்கமாக மனந்திரும்பி, ஆயத்தமாவர், ஏனென்றால் அநேக பயங்கரமான காரியங்கள், மற்றும் பல மேடையின் மேல் ஜனங்களிடத்தில் கூறப்பட்டிருக்கின்றன. நீங்கள் அந்தக் காரியங்களுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். 75 இப்பொழுது, நான் சில வேத வசனங்களை உடனே வாசிக்க விரும்புகிறேன், எனவே...என் வார்த்தைகள் தவறிப் போகும், நான் ஒரு மனிதனாயிருக்கிறேன், ஆனால் இந்த வார்த்தைகளோ தவறிப்போகாது; இது தேவனுடைய வார்த்தை, அது தவறிப்போக முடியாது. 76 இப்பொழுது, இங்குள்ள எத்தனை பேர் இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள்? நாங்கள் உங்களுடைய கரங்களைக் காணட்டும். ஓ, அற்புதம்! சரி. அவர் நேற்றும் ஒவ்வொரு நாளும் இருந்தது போலவே இன்றும் இருக்கிறார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ஓ, அது அருமையாயுள்ளது. நான் விரும்புகிறேன்...இப்பொழுது, அது உங்களுடைய விசுவாசமாயுள்ளது. இன்றிரவு நீங்கள் வேறு என்ன வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். பரிசுத்த யாக்கோபு 2-ம் அதிகாரம் 14-ம் வசனம், 26-ம் வசனத்தையும் கூட வாசிப்பேன். இப்பொழுது வாசிப்பதை கூர்ந்து கவனியுங்கள்: என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? அது முடியாது. தேவன் உங்களை இரட்சிப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், அதன்பின்னர் அவர் அதைச் செய்துவிட்டார் என்று அதை அறிக்கை செய்ய வேண்டும், அது வருமுன்னே...அப்பொழுது அது நீதியாகக் கிரியை செய்கிறது, நீங்கள் பாருங்கள். ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜன மென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? என்ன...நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து. கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளி னாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? இப்பொழுது கடைசி வசனத்தைக் கூர்ந்து கவனியுங்கள்: அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியை களில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. 77 இப்பொழுது, நீங்கள் யாவரும் விசுவாசத்தோடு, அதைக் கிரியை செய்யப் பயப்படுகிறீர்கள், அது எந்த நன்மையும் செய்யாது. ஏன், ஏன் விசுவாசத்திற்கு ஒப்பாக இல்லாத எல்லாவற்றையும் ஏன் ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது? விசுவாசித்து, நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள் என்பதன் பேரில் செயல்படுங்கள், நீங்கள்- நீங்கள் என்ன உணருகிறீர்கள், அல்லது புலன்கள் சாட்சி பகருகின்றன என்பதை அல்ல, ஆனால் உங்களுடைய விசுவாசமே அதற்குச் சாட்சி பகருகிறது. அது சரியா? நீங்கள் தேவனில் விசுவாசம் வைத்து, அதன்பின்னர் நீங்கள் தேவனில் விசுவாசம் கொண்டிருப்பது போன்று செயல்படுங்கள். 78 இப்பொழுது, ஆபிரகாம், "நான் தேவன் பேரில் விசுவாசம் வைத்திருக்கிறேன்" என்று கூறி, ஆனால் தன்னுடைய குமாரனாகிய ஈசாக்கை பலி செலுத்த பயந்திருந்தானென்றால், அப்பொழுது அவனுடைய விசுவாசம் பயனற்றது. பவுல் ஆபிரகாமை விசுவாசத்தினால் நீதிமானாக்கினான், தேவன் ஆபிரகாமில் கண்டதைக் குறித்து பவுல் பேசிக்கொண்டிருந்தான்; ஆனால் யாக்கோபு அவனைக் கிரியைகளினால் நீதிமானாக்கினான், மனுஷர் ஆபிரகாமில் கண்டவைகளைக் குறித்து யாக்கோபு பேசிக்கொண்டிருந்தான். பார்த்தீர்களா? தேவன் உங்களுடைய விசுவாசத்தைக் காண்கிறார், மனுஷரோ உங்களுடைய கிரியைகளைக் காண்கின்றனர். உங்களுக்கு விசுவாசம் உண்டு என்று நீங்கள் கூறிக்கொண்டு, அதைச் செயல்படுத்த முன்வந்து கிரியை செய்யப் பயப்படுவீர்களானால், அப்பொழுது அது எந்த நன்மையையும் செய்யாது, அது உங்களுக்கு ஒருபோதும் எந்த நன்மையையும் செய்யாது. நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், நீங்கள் அதைப் போன்று நடந்து கொள்ள வேண்டும், நீங்கள் விசுவாசிக்கவில்லையா? 79 இப்போது, அந்தத் தேவதூதன் என்னிடம் வந்தபோது நான் வருவது ஒரு சுலபமான காரியம் என்றும், அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்து எனக்குத் தெரிந்தவரையில் அது போன்ற எதுவும் நடந்ததில்லை ஆயிரக்கணக்கான, சில சமயங்களில் இருபத்தைந்தாயிரம் முதல் முப்பதாயிரம் பேர்வரை பேர்வரை உள்ள மக்கள் முன்னிலையில் நான் வெளியே வருவது, ஒரே கூட்டத்தில்...லுக், லைஃப், டைம், கோலியர்ஸ், விமர்சகர்கள், வேத பண்டிதர்கள் என எல்லாமே அதில் ஒரு குறையைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்க, நான் வெளியே வந்து, அப்படியொரு சவாலை விடுவது சுலபம் என்று நினைக்கிறீர்களா? அது சுலபம் என்று நினைக்கிறீர்களா? ஆனால் சகோதரனே, சகோதரியே, நான் தேவனை விசுவாசிக்கிறேன், அவர் என்னிடம் கூறினதை மாத்திரமே, அது அந்த விதமாகவே இருக்கும். 80 நான் அங்கு நின்று, தேசத்தின் ராஜாக்களும், மன்னர்களும் அவர்களுக்காக ஜெபிக்கும்படி என்னை அழைப்பார்கள் என்று கூறினபோது, அது...அவர் என்னிடம் அவ்விதம் கூறிய காரணத்தால் நான் அதை விசுவாசித்தேன். உலகத்திலேயே மகத்தான இராஜாவானவர் அவருக்காக ஜெபிக்கும்படி எனக்குத் தந்தி அனுப்பினார், அது இங்கிலாந்தின் ஜார்ஜ் மன்னன், அது போன்ற பல்வேறுபட்ட நபர்களையும், தேசம் முழுவதிலும் உள்ள மகத்தான மனிதர்கள். 81 இங்கே, இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய மனிதன், நீண்ட காலமாக ஊன்றுகோல்களைப் பயன்படுத்தினார், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காங்கிரஸின் காங்கிரஸ் உறுப்பினர், இங்கே அமர்ந்துள்ள திரு. உப்ஷா இங்கே அமர்ந்திருக்கிறார், அநேக வருடங்களாக முடமாயும், அறுபத்தாறு வருடங்களாகக் காயப்பட்டவருமாயிருந்தார். இதோ அவர் இன்றிரவு தன்னுடைய ஊன்றுகோலின்றி, தன்னுடைய நாற்காலியின்றி, எதுவுமின்றி சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவி உண்மையாயிருக்கிறது. தேவன்...தன்னுடைய கையை உயர்த்தியிருப்பது அவர்தான், உங்களில் சிலர் அவரை இதுவரை பார்த்ததில்லை என்றால், இவர்தான் அவர். எத்தனைபேர்... காங்கிரஸ்காரரான உப்ஷாவை, அந்தக் காங்கிரஸ்காரரைக் கண்டதில்லை? நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துவதை நாங்கள் காணட்டும். சரி, அவர் அறுபத்தாறு ஆண்டுகள் முடமாக இருந்தார், அவர் விழுந்துவிட்டார். இங்கே மேடையின் மேல் நின்று கொண்டிருக்கையில், நான் மேலே நடந்து சென்றபோது...நித்திய தேவன், அவர் என்னுடைய நியாயாதிபதியாயிருக்கிறார், நான் என் ஜீவியத்தில் அந்த மனிதனை ஒருபோதும் கண்டதில்லை அல்லது அவரைக் குறித்து கேள்விப்பட்டதேயில்லை, அவரை அறியேன். நான் கல்வியறிவு இல்லாதவன், நான் கல்வியறிவு பெற்றிருந்தால், நான் இந்த மனிதனை அறிந்திருப்பேன், நான் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களைப் படித்திருந்தால், மற்றும்...அவர் 1926-ல் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர்...ஜார்ஜியாவிலிருந்து வந்த ஒரு பெரிய மனிதர், ஆனால் நான் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. 82 ஒரு இரவு, நான் இங்கே மேடைக்கு நடந்து சென்றேன், திரு. பாக்ஸ்டர் மேடையை விட்டுச் சென்றபோது, நான் நோக்கிப் பார்த்தேன், இங்கே வெளியே தொங்கிக் கொண்டிருந்தது, நான் வெள்ளை மாளிகையைக் கண்டேன், அதைக் குறித்த எல்லாவற்றையும் பார்த்தேன், நான் பேசத் துவங்கினேன், என்னால் சொல்ல முடியவில்லை, நான் திரு. பாக்ஸ்டரிடம் கூறினேன். ஒரு சில நிமிடங்களில், அது விழுந்தது, அந்த மனிதன் எங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார் என்பதை நான் கண்டேன், அவர் தான் என்று நான் கண்டேன், அவர் ஒரு சிறு பையனாக இருந்தபோது காயப்பட்டதையும் கண்டேன். மேலும் அவர் வாழ்நாள் முழுவதும் ஒரு ஊனமுற்றவனாக இருந்தார்... நான் புறப்பட்டுச் செல்லத் துவங்கினேன், தேவனுடைய ஆவி விழத் துவங்கியது, ஒரு ஸ்திரீ சக்கர நாற்காலியிலிருந்து எழும்பி, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வெளிப்படுத்தி, இன்னும் சில காரியங்கள் சம்பவித்திருந்தன, நான் ஆரம்பித்தபோது, இங்கே திரு. கோப், சகோதரன் கோப், போதகர் அங்கு மேலே ஓடிச் சென்றார், மேலும் நான், "தேவன் அவரைச் சுகப்படுத்திவிட்டார் என்று காங்கிரஸ்காரரிடம் போய்க் கூறுங்கள். அவர் நடந்து செல்வதை நான் கண்டேன்" என்றேன். 83 இதோ அவர்...காங்கிரஸ்காரரே, ஜனங்கள் உங்களைக் காணும்படியாக நீங்கள் எழும்பி நிற்பீர்களா? இதோ அவர், அறுபத்தாறு வருடங்களாக முடமாயிருந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ் உறுப்பினராக இருக்கிறார். நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுவோமாக. என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 84"அவர்களால் அதைக் குறித்து தீமையாக ஒன்றுமே கூற முடியவில்லை, ஏனென்றால் நாற்பது ஆண்டுகளாக வாசலில் கிடந்திருந்த அந்த மனிதன், அவர்களுடன் நின்றிருந்தான்," இந்த மனிதன் அறுபத்தாறு வயது நோயுற்றவராக இருந்தார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்... 85 எப்படி திரு. உப்ஷா...? நான் என் வாழ்க்கையில் அவரைக் கண்டதேயில்லை, அவரைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது, அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்றும், அவர் யார் என்றும் நான் எப்படி அறிந்துகொண்டேன்? ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதை இங்கே மேடையில் வெளிப்படுத்தினார். பார்த்தீர்களா? அவர் அதை வெளிப்படுத்தினார். அவருடைய...அவருடைய இரகசியங்களைத் தெரியப்படுத்துகிறார்...இப்பொழுது, அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பார்த்தீர்களா? நான் அந்த நோக்கத்திற்காகவே பிறந்தேன் என்பது தற்செயலாக நடந்தது. புரிகிறதா? பெதஸ்தா குளத்தையும், தண்ணீரையும் போல, அது, "நான் என்ன ஒரு மகத்தான தண்ணீர் என்று பாருங்கள்" என்று கூற முடியாது. ஏனென்றால் தூதன் ஜலத்தை விட்டுச் சென்றபோது, அது வெறும் தண்ணீராயிருந்தது. அது சரியா? அது உண்மை. 86 இப்பொழுது, நான் தேவனுடைய கிருபையினால், உங்களுடைய சகோதரன், ஆனால் கர்த்தருடைய தூதன் இறங்கி வரும்போது, அப்பொழுது அது உங்களுக்கு ஒரு தேவனுடைய சத்தமாகிறது. ஒரு வேளை, நான் அதைக் கூறுவதனால் உங்களைப் புண்படுத்தியிருந்தால், என்னை மன்னியுங்கள், ஆனால், அது கோபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நான் உணர்ந்தேன், ஆனால் நான் உங்களுக்குத் தேவனுடைய சத்தமாயிருக்கிறேன். பார்த்தீர்களா? நான் அதை மீண்டும் கூறுகிறேன், அந்த நேரம் ஆவியின் ஏவுதலினால் உண்டானது, நீங்கள் பாருங்கள், நான்- நான் அதைக் குறித்து முதல் முறையாக மோசமாக உணர்ந்தேன், ஆனால் அது அதை மீண்டும் செய்தது. இப்பொழுது பாருங்கள், அவர் எனக்குக் காண்பிக்கிறதைத் தவிர நான் எனக்குள்ளாக ஒன்றையும் கூற முடியாது, நான் அதைக் கூறுகிறேன். நீங்கள் அதை விசுவாசித்து, என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். பாருங்கள், அவர் அதைச் செய்தார். 87 பெரிய கூட்டங்களில் அமர்ந்தபிறகு... இப்பொழுது இங்கே பாருங்கள், திரு. உப்ஷா அவர்கள் திரு. ஃப்ரீமேனின் பிரசங்கத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார். திரு. பிரீமேன், ஓ, என்னே, அநேகமாக வேதத்தில் வல்லமையான ஒரு மனிதனாக இருக்கலாம். எனக்குச் சகோதரன் ஃப்ரீமேனைத் தெரியாது, அவருடைய புகைப்படத்தைப் பார்த்து மாத்திரமே. ஆனால் அவர் ஒரு அற்புதமான தேவனுடைய மனிதன் என்பதில் சந்தேகமேயில்லை. ஓரல் ராபர்ட்ஸ், என்னே, அவர்...எனக்குத் தெரியும் ஓரல், மற்றும் ஓரல் ஒரு அற்புதமான தேவனுடைய மனிதன், ஒரு மகத்தான பிரசங்கி. சகோதரன் ஆகில்வி, நான் அவரை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன், ஒரு அற்புதமான மனிதர். சகோதரன் உப்ஷா அங்கே அமர்ந்திருந்தார், அந்த மனிதர்கள் அவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர். ஆனால் என்ன நடந்தது? அது பருவகாலமாயிருந்தது. அதன்பின்னர் அது வந்தபோது, அவர் இயற்கைக்கு மேம்பட்ட அசைவைக் கண்டார்... புரிகிறதா? அது அற்புதமாயி ருக்கவில்லையா? தேவன் தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார், அதன்பின்னர் அதை உறுதிப்படுத்த அவர் ஏதோ ஒன்றை அனுப்புகிறார், நீங்கள் பாருங்கள். ஆகையால் நாம் அதைக் குறித்த யாவற்றையும் உடையவர்களாயிருக்கிறோம். நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும், நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? 88 இப்பொழுது, அவர் தன்னுடைய சாட்சியில் கூறினார், நான்... கர்த்தருடைய வார்த்தை என் மூலமாகப் பேசிக்கொண்டிருந்தது என்று அவர் விசுவாசிப்பதாகக் கூறினார். அதனால், அவர் தனது ஊன்றுகோல்களையும் மற்ற பொருட்களையும் கீழே போட்டுவிட்டு, சாதாரணமாகவும் குறையின்றிச் சென்றார். பார்த்தீர்களா? 89 முதலாவதாக, தேவன் என்னிடம் அவ்விதம் கூறியிருந்தார் என்பதை நான் அறியாமலிருந்தால், நான் அதை அந்த மனிதனிடம் கூறியிருக்கமாட்டேன். பார்த்தீர்களா? அது உண்மை. எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்த ஒவ்வொருவரோடும் நான் நேர்மையாயிருக்க முயற்சிப்பேன். நான்...அங்கேயிருந்தால்... இயேசு, "பூலோகத்திலே நீங்கள் கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். நீங்கள் பூலோகத்திலே கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்கப்படும்" என்றார். இப்பொழுது, பிதாவானவர் அனுமதிக்கிறபடியே நாம் அதைச் செய்ய முடியும். இப்பொழுது கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக. 90 இப்பொழுது, இங்கே அந்நியர்களாகிய உங்களில் சிலருக்கு, இங்கே இருக்கிற கர்த்தருடைய ஆவியானவர், அவர் கண்டறிந்து அல்லது கூட்டத்தாரைக் குறித்து எந்தக் காரியத்தையும் கூறவில்லையென்றால், ஏன், அல்லது-அல்லது, இன்றிரவு அல்லது அந்த வரிசையில் உள்ள எவரேனும் அது-அது உண்மையென்று ஏற்கனவே இந்த ஜனங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் இன்றிரவு...ஒவ்வொரு நாளும்...இன்றைக்கு நான்...சந்தோஷமாக இருக்கவும், ஜெபிக்கவும், சுற்றி நடந்து களிகூரவும் நான் முயற்சித்து வந்திருக்கிறேன். நான் அபிஷேகத்தின் கீழ் வரும்போது, நான் இழக்கிறேன்...நீங்கள் அந்த அபிஷேகத்தின் கீழ் இருக்கும்போது- என்னால் ஒரு நாளைக்கு சராசரியாகச் சுமார் இரண்டு பவுண்டுகள் குறைகிறேன். நான் இந்தக் கூட்டத்திலிருந்து வந்தது முதற்கொண்டு, நான் ஆறு பவுண்டுகள் எடை குறைந்து விட்டேன் என்று நான் நினைக்கிறேன், அல்லது ஏதோ ஒன்று. எனவே, இன்றைக்கு நான் என்னையே தளர்த்திக்கொண்டு வெளியே செல்ல முயற்சித்தேன். அது எனக்குச் செய்வது, அது மனிதப் பகுதியை அகற்றிவிடுகிறது, ஆகையால் நீங்கள் அந்தவிதமாக நீண்ட காலம் வாழ முடியாது என்பதை நாங்கள் அறிவோம். இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள், நான் ஜெபிப்பேன், பிறகு நாங்கள் ஜனங்களை ஜெப வரிசைக்காக நிற்க வைக்கும்போது, தேவன் ஜெபத்தைக் கேட்டுப் பதிலளிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 91 அன்புள்ள பரலோகப் பிதாவே, நட்சத்திரங்களுக்கு அப்பாலும், எல்லா நோய்களுக்கும், துன்பங்களுக்கும் அப்பாலும் உள்ள அந்த மகத்தான, மகிழ்ச்சியான பிரதேசத்தை நோக்கி இன்று இரவு தங்கள் பாதையில் சென்றுகொண்டிருக்கும் இந்தக் கிறிஸ்தவர்கள் கூட்டத்திலும், தேவனால் இரட்சிக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலும், தேவனுடைய குமாரர்களிலும் குமாரத்திகளிலும் ஒருவனாக எண்ணப்படும் இந்தச் சிலாக்கியத்தைப் பெற்றதற்காக இன்று இரவு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கர்த்தாவே, கிறிஸ்துவின் கிருபையினால், நீர் என்னை அவர்களுடைய சகோதரனாயிருக்கும்படி அழைத்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ள வனாயிருக்கிறேன். நான் எவ்வளவு நன்றியுள்ளவ னாயிருக்கிறேன்! 92 இப்பொழுதும், அருமையான பிதாவே, நீர் ஆதியிலிருந்தே நீர் மக்களுக்கு இவ்வாறு சாட்சி பகர்ந்ததற்காகவும், உம்முடைய ஏழ்மையான, படிப்பறியாத ஊழியக்காரன், சொல்லும்படி நீர் அனுமதித்த காரியங்களுக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; பேசுவது நீரே தவிர, ஒரு ஏழை, கல்லாத மனிதன் அல்ல என்பதைக் காண்பித்து, பூமியின் பெரிய மனிதர்களும் ராஜாக்களும்...அது நிகழும்படி நீர் செய்தீர். இன்னும் அதிகமானவை வரவிருக்கின்றன என்றும் நான் நம்புகிறேன். 93 இப்பொழுதும், பிதாவே, இன்றிரவு கலிபோர்னியாவில் எங்கும் மகத்தான ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த இடத்தில் இங்கு இருப்பது என்னுடைய சிலாக்கியம். உம்முடைய ஊழியக்காரன், சகோதரன் ஃப்ரீமேன், அங்கே மூலையில் இருக்கிறார், நீர் அவரோடு இருக்கிறபடியால், அவர் எங்கிருக்கிறார் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். இன்றிரவு அங்குள்ள அநேகரை நீர் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அந்த ஏழை ஜனங்கள் அநேகர், எங்களுடைய கறுப்பு நிற நண்பர்கள் அநேகர் அங்கே இருக்கிறார்கள். தேவனே, நீர் அவர்களை ஆசீர்வதித்து, இன்றிரவு அவர்களைச் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அது ஒரு மகத்தான இரவாக இருக்கட்டும். நாங்கள் தேவாலயத்தில் கேள்விப் பட்டது...[ஒலிநாடாவில் காலியிடம்)...அங்கே உம்முடைய ஊழியக்காரன், திருமதி மெக்பெர்ஸன்...(ஒலிநாடாவில் காலியிடம்.)...இன்றிரவு ஒவ்வொரு வரும் விடுவிக்கப்பட உள்ளே வருகிற அந்த ஏழை சுகவீனமான ஜனங்கள் ஒவ்வொருவரையும் தொட்டு...(ஒலிநாடாவில் காலியிடம்.) கர்த்தாவே, அதை அருளும். 94 பிதாவே, உலகம் முழுவதிலும் உள்ள உம்முடைய பிள்ளைகளை இன்றிரவு நினைவு கூரும், அவர்களைச் சுகப்படுத்தும். ஒவ்வொரு ஊழியக்காரரையும், உமது பணிப்பெண்களில் ஒவ்வொருவரையும், இந்த மகத்தான அறுவடை வயலில் உமக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முயற்சி எடுக்க முயற்சிக்கிறவர்களையும் ஆசீர்வதியும். அவர்கள் யாவரையும் ஆசீர்வதியும். 95 பின்பு, பிதாவே, இன்றிரவு இங்கே இந்தச் சிறு குழுவில் எங்களை நினைவுகூரவும், கர்த்தாவே, அநேகர் சுகமடைய வேண்டும் என்றும், அநேகர் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும், அநேகர் உம்முடைய பிரசன்னத்தை குறித்து உறுதி கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் யாவரும், உம்முடைய ஊழியக்காரனையும் சேர்த்து, இங்குள்ள எல்லா ஊழியக்காரர்களும், நாங்கள் உள்ளே பிரவேசித்தபோது இருந்ததைக் காட்டிலும் இந்த வீட்டின் வாசற்படியை விட்டு வெளியேறும் போது ஒரு மேலான கிறிஸ்தவராகப் பிதாவே, உம்மில் அதிக விசுவாசத்தோடும், உமக்காக அதிக அன்போடும் இன்றிரவு செல்வோமாக. அதற்கு இந்தவிதமான ஆசீர்வாதங்களை அருளும். 96 கர்த்தாவே, இன்றிரவு உம்முடைய தெய்வீகச் சித்தமானால், முடமானவர்கள் மேடையின் மேல் வந்தால், மேலும், அவர்களுக்கு ஒரு அற்புதத்தின் வடிவில், தன்னிச்சையாக, உடனடியாகக் சுகமளிப்பதே உமது சித்தம் என்று நான் நம்புகிறேன், கூட்டத்தில் உள்ள ஜனங்கள் அதைக் கண்டு மகத்தான விசுவாசத்தோடு விசுவாசிக்கும்படியாக, கர்த்தாவே, அது அவ்வண்ணமாய் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆனால் எப்படியிருந்தாலும், இல்லையென்றால், நாங்கள் உம்மிடத்தில் கேட்கும்போது, நாங்கள் கேட்பதை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பிதாவே, அவர்கள் ஏமாற்றமடையாதபடிக்கு, நீர் அவர்களுக்கு மகத்தான விசுவாசத்தை அருள வேண்டும் என்றும், இங்கிருந்து சந்தோஷமாய், களிகூர்ந்து, எந்த நேரத்திலும் அதை எதிர்நோக்கி, அல்லது பார்ப்பதற்கு-அல்லது அவர்களுடைய தொல்லை என்னவாயிருந்தாலும் சரி தங்களுடைய ஜீவியத்தின் ஒவ்வொரு நிமிடமும் சிறப்பாக நடக்க முயற்சிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 97 அவர்களில் எவருடைய இருதயத்தின் இரகசியங்களையும் வெளிப்படுத்துவது உம்முடைய தெய்வீக சித்தமாக இருந்தால் அதுவே அவர்கள் இந்த நிலையில் இருக்கக் காரணமாயுள்ளது என்றும், கர்த்தாவே, உம்முடைய தாழ்மையான ஊழியக்காரனிடத்தில் பேசும். இதோ, கிறிஸ்துவின் இரத்தம் என்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் என்னைச் சுத்திகரிக்கும் என்றும், இந்த இரவினூடாக உம்முடைய ஜனங்களிடத்தில் பேசக்கூடிய ஒரு வழியாக இருப்பேன் என்று நம்பி நிற்கிறேன். பிதாவே, நான் என்னுடைய ஜெபத்தை என்னுடைய முழு இருதயத்தின் உத்தமத்தோடு உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது, அதற்குச் செவிகொடும். ஆமென். 98 இப்பொழுது, அன்பார்ந்த கிறிஸ்தவ நண்பர்களே, நீங்கள் யாவரும் என்னோடு ஜெபத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும், உங்களில் அநேகர் அநேகமாக ஜெப வரிசையில் இருக்கமாட்டீர்கள், ஜெப வரிசையில் இருக்க விரும்புகிறவர்கள்; என்னால்-என்னால் முடிந்தால் நலமாயிருக்கும். விசுவாசம் தொடர்ந்து வளருகையில், கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு, நாம் நூறு பேர்வரை, ஒரு வேளை, முயற்சிக்கப் போகிறோம் என்று நான் நம்புகிறேன். அப்படியானால் நாம் நூறு வரைச் செல்ல முடிந்தால், பகுத்தறிதல் அதிகமாமாக இல்லாவிடில், அப்பொழுது நான் அதையெல்லாம் சரிப்படுத்த முடியும், நீங்கள் பாருங்கள். ஆனால் நான்...அதில்-அதில், அது வரும்போது, அங்கே அநேக காரியங்கள் உள்ளன... 99 இப்பொழுது, அவர் அங்கே அந்த இசையை இசைக்கத் துவங்கும்போது, அது கீழே வருவதை என்னால் உணர முடிகிறது. அங்குதான் அது உள்ளது. பார்த்தீர்களா? 100 பாருங்கள், கிறிஸ்தவ நண்பரே, அவைகள்...அந்தப் புகைப்படங்களில் ஒன்று எங்கே உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் எல்லோருமே அதைக் கண்டிருக்கிறீர்கள், நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அநேகமாக நீங்கள் எல்லோரும் அதைக் குறித்த புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள், அது அங்கே முன்பக்க அறையில் உள்ளது. அமெரிக்காவின் சிறந்த புலனாய்வாளர்களான எஃப்.பி.ஐ-யால், அது தேவனுடைய தூதன் என்று விஞ்ஞான உலகத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 101 இப்பொழுது, அவர் இங்கே இப்பொழுது மேடையில் இருக்கிறார். அது உண்மையே, அருமை நண்பரே, அதை எப்படி உங்களை விசுவாசிக்கச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதுஅது உண்மையாயுள்ளது. நீங்கள் அந்த மனிதனை, உங்களுடைய சகோதரனை நோக்கிப் பார்க்கவில்லையென்றால், ஆனால் கர்த்தராகிய இயேசுவையும், மேடையில் உள்ள அவருடைய சுகமளிக்கும் தூதனையும் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறதை நோக்கிப் பார்ப்பீர்களானால்... 102 தேவன் சுகமளிக்கும் தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்பொழுது அந்த வெண்கல சர்ப்பத்தின் மேல் அது என்னவாயிருந்தது? பெதஸ்தா குளத்தில் உள்ள தண்ணீர் வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தூதனாயிருந்திருக்கவில்லையென்றால், அது என்னவாயிருக்கும். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நான் தேவனுடைய வரம் அல்ல, தூதன் தேவனுடைய வரம்; அது பரலோகத்திலிருந்து வந்தது, நான் பூமியிலிருந்து வந்தேன். அவர் பரலோகத்திலிருந்து பூமிக்குரிய ஜனங்களிடத்தில் பேசும்படி போர்த்திக்கொள்ள அல்லது பூமிக்குரிய பாத்திரத்தை மூடி அதாவது-அதாவது அவர்கள்... நீங்கள் அவர் மேல் விசுவாசம் வைத்து, என்பேரில் அல்ல, நான் பேசிக்கொண்டிருக்கிற அவரைக் குறித்தே, அவ்வாறு செய்வதன் மூலம் தேவன் உங்களைச் சுகப்படுத்துவார். 103 நாம் இப்பொழுது நம்முடைய ஜெப வரிசையை அழைப்போம். (மகனே, நீ என்ன என்ன என்ன எண்களை, அல்லது, எழுத்துக்களையும், எண்களையும் கொடுத்தாய்? ஐம்பத்தொன்றிலிருந்து நூறு வரை. அந்த எழுத்து என்ன? யு. இன்னும் யு-வில் தான் உள்ளது. சரி. ஐம்பத்தியொன்று முதல் நூறு வரை. இப்பொழுது நாம் பார்ப்போம், எத்தனை...? நாம் பார்ப்போம், இங்கே ஜெப அட்டை ஐம்பத்தியொன்று உள்ளதா? யாராகிலும் எழும்பி, ஐம்பத்தியொன்று என்ற ஜெப அட்டையை வைத்துள்ள உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரியாக அங்கே, ஜெப அட்டை ஐம்பத்தியொன்றா? ஐம்பத்திரண்டு என்பது இங்கே உள்ளதா? சரி. இங்கே ஐம்பத்து மூன்றா? இப்பொழுது, அந்த-அந்த விதமாகவே நீங்கள் வருகிறீர்கள். இப்பொழுது, அந்தவிதமாகவே அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும். இப்பொழுது, என்னால் முடியும்... 104 நீங்கள் விரும்பினால், நாம் அந்த ஜனங்களை இங்கே கொண்டு வர முடியும், தேவன் அவர்களோடு என்ன கோளாறு இருந்தது என்பதை சரியாகக் கூறுவார், அல்லது நான் கூட்டத்திலிருந்து ஒருவரை அல்லது ஜெப அட்டை இல்லாத ஒருவரை அழைக்கலாம், அபிஷேகம் இங்கே உள்ளது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இங்கே சுகப்படுத்த இப்பொழுது பிரசன்னமாயுள்ளது. இப்பொழுது, எத்தனை பேர்...? இப்பொழுது, அழைக்கலாம்... நாம் பார்ப்போம், எத்தனை பேர்...? ஏன், நாம் முழு குழுவையும் ஒரே நேரத்தில் அழைக்கலாம். 105 உங்கள் எல்லோருக்கும் விசுவாசம் உண்டு. இப்பொழுது நினைவிருக்கட்டும், வரப்போகும் நீங்கள், நீங்கள் இங்கே வரவேண்டும், நீங்கள் இங்கே கடந்து செல்லும்போது, நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசியுங்கள். மற்ற யாவரும் சிறிது நேரம் அமர்ந்திருங்கள். மேலும் கட்டிலில் உள்ள-அந்தப் பெண்மணி, சகோதரியே, நீங்களும் கூட ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கிறீர்களா? ஹூ? 106 ஒரு நிமிடம், என் மகன் என்னிடம் கூறினான்... இப்பொழுது, ஜெப வரிசையில் அழைக்கப்படப் போகிறவர்கள் கட்டில்களோடும், சக்கர நாற்காலிகளோடும், நான்...உங்கள் எண்ணை அழைக்கும்போது நீங்கள் இங்கே வரிசையாக நின்றால், நான் கீழே வந்து உங்களுக்காக ஜெபிப்பேன், நீங்கள் வர விரும்பவில்லை என்றால், அல்லது அவர்கள் உங்களை மேலே தூக்க விரும்பினால், உங்களை மேடைக்கு அழைத்து வர வேண்டிய அவசியமே இருக்காது... இங்குள்ள அந்தச் சிறு பெண்மணி ஒரு-ஒரு...அவள் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பது போன்று காணப்படுகிறதை நான் காண்கிறேன். 107 இப்பொழுது ஐம்பத்தி மூன்று, ஐம்பத்தி நான்கு, ஐம்பத்தைந்து, ஐம்பத்தி ஆறு, ஐம்பத்தி ஏழு, ஐம்பத்தி எட்டு, ஐம்பத்தி ஒன்பது, அறுபது. நீங்கள் இங்கே வரிசையாக வரிசையில் நிற்கிறீர்கள், நீங்கள் இருக்கிறவிதமாகவே எண்களின்படி ஒழுங்காக இருக்கிறீர்கள். சரி. சரி, அறுபது. அது ஏறக்குறைய...? 108 சரி, ஒரு நிமிடம், எங்கோ ஏதோ தவறு உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓ, யாராவது அதை எடுத்துவரவா...அந்தச் சிறுமி, அவளா...? ஒரு நிமிடம் பொறுங்கள். யாராவது அவளை அங்கே அழைத்துச் செல்ல வேண்டுமா? அந்தச் சிறுமி அங்கேயே இருக்கட்டும். தேனே, உன்னிடம் ஒரு ஜெப அட்டை இருக்கிறதா? நீ ஜெபிக்கப்படுவதற்கு உனக்கு உரிமை உண்டு. ஒரு நிமிடம், அந்த இருக்கையில் அவளை அங்கேயே உட்கார விட்டு விடுங்கள். 109 இனிய இருதயமே, இதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? இது உண்மையென்று நீ விசுவாசிக்கிறாயா? இப்பொழுது உன்மேல் வந்து கொண்டிருக்கும் அந்த விநோதமான உணர்வு என்னவென்று நீ நினைக்கிறாய்? அதுதான் பரிசுத்த ஆவி, இல்லையா? தேனே, நீ அதை விசுவாசிக்கிறாயா? தேவனுடைய தூதன் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள என்னை அனுப்பினார் என்று சகோதரன் பிரான்ஹாம் கூறியுள்ளது உண்மையென்று நீ விசுவாசிக்கிறாயா? நீ அதை விசுவாசிக்கிறாயா? நீ-நீ முடமாக அல்லது ஏதோ ஒரு காரியத்தை நான் காண்கிறேன். உன்னுடைய ஒரு கால் துண்டிக்கப்பட்டிருக்கிறதாக நான் நம்புகிறேன். அது சரியா? அது சரியா? ஆம், அது...எனக்கு உன்னைத் தெரியாது, எனக்குத் தெரியுமா, தேனே? 110 ஒரு சகோதரன் அங்கு நடந்து சென்றார், பாருங்கள், அது ஒருவிதமான, தரிசனமாக வெளிப்பட்டது. இப்பொழுது ஒரு நிமிடம், இப்பொழுது ஒவ்வொருவரும் ஒரு வினாடி மீண்டும் பயபக்தியாயிருங்கள். 111 இப்பொழுது மீண்டும் இந்தப் பக்கம் நோக்கிப் பார், தேனே, நான் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். பாருங்கள், அங்கே அநேக ஜனங்கள் விசுவாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அது... இப்பொழுது, ஆம், ஹூ-ஹூ, உனக்கு ஒரு உனக்கு ஒரு புற்று நோய் அதைச் செய்தது, அது அவ்வாறு செய்யவில்லையா, தேனே? நீ எடுத்து...உன் காலைத் துண்டித்தது. இன்னும் உன்னுடைய முறைமையில் இருக்கிறது, இன்னமும் இருந்து கொண்டே இருக்கிறது. அது சரிதானே? தேனே, இப்பொழுதே நான் உனக்காக ஜெபிக்கப் போகிறேன். 112 எங்கள் பரலோகப் பிதாவே, அங்கே அமர்ந்துள்ள அந்த எளிய சிறுமியை, அன்புள்ள தேவனே, நீர் அவளை ஜீவிக்க அனுமதிக்கப் போகிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். அருமையான, சிறிய குழந்தையின் மேல் இரக்கமாயிரும். இப்பொழுதே அவளுக்குச் சுகத்தை அருளும். நான் இந்த ஆசீர்வாதங்களை, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 113 தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீ சுகமடையப் போகிறாய் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? நீ அதை இப்பொழுது ஏற்றுக்கொள்கிறாயா? தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது அருமையாயுள்ளது. நீ தான். அது உண்மை, அவர் உன்னைச் சந்தித்தார். (சகோதரர் பில்லி பால் பிரான்ஹாம், "அப்பா?" என்று கேட்கிறார்) (உம்-ஹும்?) ["அந்த ஜனங்கள் யாவரும் அங்கே இருக்கிறார்கள், அவர்களில் கிட்டத்தட்ட இருபது பேர் மாத்திரமே வந்திருந்தனர். அவர்கள் யாவரும், யூ, ஐம்பத்தியொன்று முதல் நூறு வரை, அவர்கள் ஒவ்வொருவரும் உள்ளனர்."] (நீ என்ன சொல்கிறாய்?) ("எனக்கு யூ, ஐம்பத்தியொன்றிலிருந்து நூறு வரை தேவை, அங்கே ஏறக்குறைய இருபது பேர் மாத்திரமே உள்ளனர்.") (ஓ.ஓ,சரி) 114 ஐம்பத்தியொன்றிலிருந்து நூறு வரை, ஐம்பத்தியொன்றிலிருந்து நூறு வரை, அந்த வழியாக வரிசைப்படுத்துங்கள். ஒவ்வொருவரும் உங்களால் முடிந்தளவு பயபக்தியாயிருங்கள், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 115 ஐயா, அது என்னவாயிருந்தது? [ஒரு சகோதரன் அந்தச் சிறுமியின் அட்டையைக் குறித்து கருத்துரைக்கிறார்-ஆசி.) ஓ, ஆம். அது சுகப்படுத்தாது, அது அப்படியே...ஆனால் நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்...ஜனங்கள் அசைந்து கொண்டிருந்ததால் என்னால் காண முடியவில்லை. நான் அந்தப் சிறுமியிடம் நெருங்கிச் செல்லப் போகிறேன்...நான் நம்புகிறேன்...என்ன...? அவர்கள் சுகமாக்கப்படும்போது, நான் ஒரு வெள்ளை ஒளியைக் காண்கிறேன். அதே ஒளியானது சுற்றிலும் சென்று அப்படியே ஆசீர்வதிக்கிறது, அது ஒரு ஆசீர்வாதத்தைப் போன்றுள்ளது, நான் அதைக் காண்கிறேன். அந்தச் சிறுமி சரியாகிவிடப் போகிறாள் என்று நான் நினைக்கிறேன். சகோதரியே, அவள் நலமாக இருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். பார்த்தீர்களா? தேனே, நீ கவலைப்பட வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன், நீ சுகமடையப் போகிறாய். 116 சரி. இப்பொழுது, ஒவ்வொருவரும்...இப்பொழுது, அவர்கள் ஒருவிதமாக, ஒரு சிறு...இப்பொழுது, அவர்கள் ஏறக்குறைய எண் வரிசைப்படி வருவதை வாயிற்காப்போன்கள் கவனிப்பார்கள், ஏனென்றால் இந்தக் காரியங்கள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. கர்த்தர் முன்செல்கையில் நான்...செய்ய வேண்டும். 117 இப்பொழுது, இப்பொழுது ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, அங்கே முந்தின ஜெப வரிசையில் எத்தனை பேர், நீங்கள் குணமடையப் போகிறீர்கள் என்று என்றுஎன்று உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கப்போகிறீர்கள்? நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று, உங்களுடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசியுங்கள். நீங்கள் இப்பொழுது கர்த்தராகிய இயேசுவிடம் உங்களை அர்ப்பணித்து, "என் பரலோகப் பிதாவே, உம்மை என் சுகமளிப்பவராக இப்பொழுது நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்றிரவு உம்முடைய கிருபையினால், என்ன சம்பவித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நான் அந்த ஜெப வரிசையினூடாக வந்து கொண்டிருக்கும்போது, நான் உம்முடைய ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்கிறேன். என்மேல் கைகள் வைக்கப்படும்போது, நான் சுகமடைவேன் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இனி ஒருபோதும் எதிர்மறையான சாட்சியை உடையவனா யிருக்கமாட்டேன், நான் கர்த்தரை விசுவாசிக்கப் போகிறேன்" என்று கூறுவீர்களா? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, "நான் அதை விசுவாசிக்கிறேன், நான் அதை இப்பொழுது அறிக்கை செய்கிறேன்" என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 118 இப்பொழுது, ஒருவர் ஒரு சமயம் என்னிடத்தில் கூறினார், என்னிடத்தில் அல்ல, ஆனால் மற்றொரு சகோதரனிடத்தில், ஒரு- ஒரு ஊழியக்காரன் அவரைத் தாக்கி, "ஓ, அது ஒரு அவமானம்! ஏதாவதொன்று சம்பவிப்பதற்கு முன்னர் ஜனங்கள் விசுவாசிக்கச் வேண்டும் என்று அவர் கூறுகிறார்" என்று கூறினார். 119 விசுவாசத்தைத் தவிர வேறு எப்படி நீங்கள் சுகமடையப் போகிறீர்கள்? ஆபிரகாம் சாராளின் மூலம் அவன் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப் போவதாகத் தேவனை விசுவாசித்தான், அது இருபத்தைந்து ஆண்டுகளாக நடக்கவேயில்லை, அது சம்பவிக்கப் போகிறது என்ற விசுவாசத்தில் அவன் அதிக பலமாக வளர்ந்தான். நாம் ஆபிரகாமின் புத்திரராயிருக்கிறோம். அது சரியா? 120 சரி. இப்பொழுது உங்களால் முடிந்தளவு ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, ஒருகால் அது பரிசுத்த ஆவியானவர்...ஒரு நிமிடம். இப்பொழுது, சற்று நேரம், நான் ஆழமான அபிஷேகத்தின் கீழ் வரும் வரையில், அது ஒரு- ஒரு சிறு பகுத்தறிதலை அளிக்கலாம், அதன்பின்னர்...ஜனங்கள் அவ்வழியாக வர முடியும். மேலும் அவர்கள் நம்பிக்கை வைத்து, தண்ணீர்க் குளத்தில் இறங்குவதைப் போல, நம்பிக்கையுடன் முன்வந்தால், கர்த்தருடைய தூதன் இங்கே மேடையில் இருக்கிறார், அவர் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நாம் ஜெபிப்போமாக. 121 பிதாவே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் ஒன்றையும் அறியேன். ஆனால் நீர் இப்பொழுது ஒரு மகத்தான சந்திப்பில் வந்து, உம்முடைய ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள்-நாங்கள் ஜெபிக்கிறோம், கர்த்தாவே, இப்பொழுதே அவர்களிடத்தில் பேசி, அவர்களைச் சுகப்படுத்தும். நீர் இங்கிருக்கிறதையும், உம்முடைய ஊழியக்காரனோடு... இருக்கிறீர் என்ற ஒரு வெளிப்படுத்துதலை நீர் அருளுவீராக. கர்த்தாவே, அதை அருளும். ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். ஆமென். சரி, இப்பொழுது ஜெபத்தில் இருங்கள். நீங்கள் விரும்பினால்... 122 இப்பொழுது, நீங்கள் உங்களுடைய நோயாளியைக் கொண்டு வாருங்கள். இப்பொழுது ஒரு நிமிடம். இப்பொழுது, சரியாக என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பெண்மணியே, எப்படி இருக்கிறீர்கள்? அந்த வழியாக வரும் நோயாளிகளுக்கு இதைக் கொஞ்சம் ஆயத்தம் செய்தேன், உங்களுக்குத் தெரியும், ஏன், அவர்களால்-அவர்களால் கேட்க முடியும், அங்குள்ள ஜனங்கள் நோயாளிகளைக் கேட்க முடியும் என்று நான் பொருட்படுத்திக் கூறுகிறேன், நீங்கள் பாருங்கள், அதைத்தான் நான் கூறுகிறேன். நீங்கள், நீங்கள் ஜெபிக்கப்படுவதற்காக வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை உங்களைக் குறித்த ஒரு சிறு காரியத்தை அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள், ஏனென்றால் நான் நான் நான் அதை அங்கே உணருகிறேன், அது உங்களுடைய-உங்களுடைய நிலைமைகளை, நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிற ஒரு காரியமாயுள்ளது 123 நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள், இல்லையா? மிகுந்த நரம்புத்தளர்ச்சி. நீங்களும் கூடச் சற்று எடை குறைந்திருக்கவில்லையா? உங்களைக் காட்டிலும் மிகவும் கனமான ஒரு பெண்மணி எனக்கு முன்பாக நிற்பதை நான் காண்கிறேன். மேலும், நீங்கள் ஒரு ஊழியக்காரனாயிருக்கவில்லையா, அல்லது வார்த்தையின் அதைப் போன்ற ஏதோ ஒரு காரியமா யிருக்கவில்லையா? நீங்கள் போதிக்கவில்லையா அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றைக் கூறவில்லையா? ஆம், அப்படித்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் நினைத்தேன். ஹூ- ஹூ. இப்பொழுது நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் எல்லா நேரத்திலும் இறுக்கமடைந்திருக்கிறீர்கள். அது என்னவெனில், நீங்கள் உங்களை ஒரு நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டீர்கள்; எப்படியாயினும், நீங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாக இருந்து வருகிறீர்கள். நீங்கள் அண்மையில் கவலைப்படத் துவங்கினீர்கள், உங்களுக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது போன்று காணப்பட்டது, நீங்கள் முழுவதுமே இறுக்கமடைந்துவிட்டீர்கள். இப்பொழுது, அது பிசாசு உங்களைத் தடுக்க முயற்சிப்பதைத் தவிர வேறொன்றுமல்ல, இப்பொழுது, சாத்தான் உங்களைச் சபித்து, அதை உங்களுக்கு முன்பாக வீச முயற்சிக்கிறான். மேலும்... நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது, நீங்கள் அதைக் கீழே தள்ளிவிட்டு, இப்பொழுது விசுவாசிக்க வேண்டும். அது உண்மையா? சரி, ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். 124 ஓ, பிதாவே, உம்முடைய இரக்கங்களுக்காகவும், தயவுக்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், எங்களுடைய அருமை சகோதரியை இப்பொழுதே சுகப்படுத்தும்படி நான் உம்மிடம் ஜெபிக்கிறேன் 125 பிசாசே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அந்த ஸ்திரீயை விட்டு, அவளை விட்டு வெளியே வா, அவளை விட்டுப் போ! 126 இப்பொழுது இங்கே பாருங்கள், சகோதரியே, நீங்கள் அதை இப்பொழுது ஏற்றுக்கொள்கிறீர்களா? சரி. களிகூர்ந்து கொண்டும், மகிழ்ந்துகொண்டும் போய், கர்த்தருடைய பணியில் ஈடுபடுங்கள். 127 நாம் இப்பொழுது, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுவோமாக. அந்தப் பெண்மணி-அவள் சரியாகிவிடப் போகிறாள், அவள் சரியாகிவிடுவாள். 128 இப்பொழுது ஒரு நிமிடம். இப்பொழுது, இங்கே என் பக்கத்தில் வேறொருவர் நின்று கொண்டிருக்கிறார். இப்பொழுது ஒவ்வொருவரும்... 129 ஐயா, இங்கே வாருங்கள். (அந்தச் சகோதரன், "ஐயா, எனக்கு என்ன கோளாறு?" என்று கேட்கிறார்-ஆசி.) ஐயா? ("ஐயா, எனக்கு என்ன கோளாறு?"] சரி இப்பொழுது, நீங்கள் இந்தவிதமாக நோக்கிப் பார்த்து, தேவனுடைய ஊழியக்காரன் என்று என்னை விசுவாசித்தால்...இப்பொழுது, நாம்-நாம் இந்த ஜீவியப் பயணத்தில் அந்நியர்களாயிருக்கிறோம், என் சகோதரனே, நீங்கள் அங்கே நின்று கொண்டிருப்பதைத் தவிர எனக்கு எனக்கு உங்களைத் தெரியாது. நீங்கள் மேலே ஏறி வந்தபோது, வரவேற்கும் ஒரு உணர்வு இருப்பதை நான் உணர்ந்தேன். நீங்களும் கூட அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. உங்களுக்கு- உங்களுக்கு வயிற்றுக்கோளாறு உள்ளது, இல்லையா? ஆம், ஐயா, அது உண்மை, நீங்கள் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஆகாரம் உங்களுக்கு முன்பாக வருவதையும், அதன்பின்னர் போய்விடுவதையும் நான் காண்கிறேன், எனவே நான் அறிவேன். நீங்களும் கூட ஒரு ஊழியக்காரர் அல்லவா? நீ சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரனும் கூட. அது சரிதானே? ஆம், ஐயா. சகோதரனே, நீங்கள் ஒரு விசுவாசி, நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நீங்கள் சுகமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள், நீங்கள் விரும்பவில்லையா? சகோதரனே, நீங்கள் இப்பொழுது ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். 130 எங்கள் பரலோகப் பிதாவே, கர்த்தாவே, நான் இன்றிரவு உம்முடைய ஊழியக்காரனின் மேல் என்னுடைய கரங்களை வைக்கிறேன். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்களேயானால், அவர்கள் சுகமடைவார்கள் என்று வேதம் கூறியுள்ளது. 131 சாத்தானே, இந்த மனிதனை கட்டவிழ்த்துவிடு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், நீ அவனைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறாய், இந்த மனிதனை விட்டுவிடு! 132 இப்பொழுது, என் சகோதரனே, உங்களுடைய வயிற்றுக் கோளாறிற்குக் காரணம் என்னவெனில், சற்று முன்னர் கடந்து சென்ற பெண்மணியைப் போன்றதான ஏதோ ஒரு காரியமாய் இருந்து வருகிறது, அது ஒரு நரம்புத்தளர்ச்சி நிலை. நீங்கள் சிறிது காலமாகவே பதட்டமாக இருந்து வருகிறீர்கள், சமீபகாலமாக அது முன்பைக் காட்டிலும் மோசமாக உள்ளது. அது சரிதானே? ஆம் ஐயா. அப்பொழுது நீங்கள் ஏராளமான தொல்லைகளை உடையவர்களாயிருக்கிறீர்கள் இவற்றைப் போன்றே. இப்பொழுது, நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்...நான் உங்களுக்கு உண்மையைக் கூறினேன். அது சரியா? நீங்கள் ஒரு ஊழியக்காரர். அது உண்மையானால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அது-அது உண்மை. சரி. இப்பொழுது நீங்கள்...இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமேயன்றி நான் அதை அறிந்து கொள்ள வழியேயில்லை. அது சரியா? இப்பொழுது, நீங்கள் உணருகிறீர்கள், அங்கே ஒரு- ஒரு சுவிசேஷ ஊழியக்காரராக இருப்பதால், நீங்கள் இங்கே ஏதோ ஒரு விசித்திரமான காரியத்தை உணருகிறீர்கள், அல்லது, ஒரு அன்பின் உணர்வு, மற்றும்...அது சரியா? இப்பொழுது, ஜனங்கள் அது சரியென்று காணும்படியாக உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஆம். 133 இப்பொழுது, இந்த ஊழியக்காரர் கர்த்தருடைய தூதனிடம் என்ன பேசினார் என்பதற்கு அவர் ஒரு சாட்சி. இப்பொழுது, இதற்கும் மேலாக வேறென்ன இருக்கிறது, கர்த்தருடைய ஆவி? பரலோகத்திலிருக்கிற தேவன் அந்த மனிதனைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்திருக்கிறார்...ஆனால் இப்பொழுது இங்கே மேடையில் நின்று கொண்டு, அவர் மேலே நடந்து சென்றபோது, நான் ஒரு வரவேற்கத் தக்க ஆவியை உணர்ந்தேன். நான், "நீங்கள் ஒரு கிறிஸ்தவ விசுவாசி" என்றேன். இப்பொழுது, நம்முடைய போதகர் மூலமாக நாத்தான்வேலிடம், "இதோ ஒரு உண்மையான இஸ்ரவேலன், ஒரு விசுவாசி, ஒரு இஸ்ரவேலன்...' அப்பொழுது அவன், "நீர் என்னை எப்பொழுது அறிவீர்?" என்று கேட்டான். 134 இங்கே நான் அவரைக் கண்டேன், அவருடைய தொல்லை, அவருடைய காரியங்கள், அவருடைய வயிற்றுக் கோளாறு போன்றவை, அது சரியாயிருந்தது, அவர் ஆவியின் சாட்சியை உணருகிறார். கடைசி நாட்களில் இங்கே இருக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வாக்களித்த அதே ஆவியானவர்தானா அது? 135 என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. போய் நீங்கள் நலமாக இருப்பீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக... நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுவோமாக, ஒவ்வொருவரும், விசுவாசிக்கிற யாவரையும் குணமாக்க தேவன் இங்கே இருக்கிறார் என்று உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 136 சரி, சகோதரியே இப்பொழுது வாருங்கள். அங்கே நாற்காலியில் நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள் என்று நான் உங்களிடம் கூறினால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? சகோதரியே, நீங்கள் அப்படித்தான். உங்களுடைய பாதையில் சென்று களிகூர்ந்து, சுகமடையுங்கள். ஆமென். 137 இப்பொழுது, கூட்டத்தார் புரிந்துகொள்ளும்படியாக, ஜனங்களில் சிலர்...ஜெப அட்டைகள் ஏதும் இல்லாத உங்களில் சிலர் இந்தப் பக்கம் நோக்கிப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 138 அங்கே கடந்து சென்ற அந்தச் சிறிய சகோதரி, அந்தச் சர்க்கரை வியாதி மற்றும் மற்ற காரியங்களினால் அவதியுற்றுக் கொண்டிருந்தாள், அவள் இப்பொழுது சரியாகிவிடப் போகிறாள், இரத்த சோகை. 139 இப்பொழுது விசுவாசமாயிருங்கள். இப்பொழுது பொறுங்கள், ஒரு பெண்மணி இங்கே ஒரு கட்டிலின் மேல் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது, பெண்மணியே, நான் உங்களிடம் பேசுவதன் மூலம் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உங்களிடம் ஜெப அட்டையே கிடையாது, நீங்கள் அந்நியர், எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் நீங்களோ மூட்டு வீக்கத்தினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாய். அது சரிதானே? அது உங்களையும் கூட முடமாக்கிவிட்டது. அது சரிதானே? இப்பொழுது, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், தேவனுடைய அற்புதங்கள், அல்லது, காரியங்கள் மேடையில் சம்பவிக்கத் துவங்கும்போது, நான் உங்களுடைய ஸ்தானத்தில் இருந்திருந்தால், நான், "இயேசு கிறிஸ்துவே, நான் இப்பொழுது உம்மை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவேன் என்று நான் நம்புகிறேன். இங்கே ஒரு மனிதர், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண்ணுக்குக் குறுக்கே வந்து கொண்டிருக்கிறார், என்ன நடக்கிறது என்பதை என்னால் காண முடியவில்லை. ஆனால் நான்-நான் நம்புகிறேன், நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு அவரை ஏற்றுக்கொண்டால், தேவன் உங்களுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுவார், அப்பொழுது நீங்கள் எழுந்து கட்டிடத்தை விட்டு வெளியே சென்று, ஒரு ஆரோக்கியமான நபராக இருக்க முடியும். இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் கூட உங்களுடைய இருதயத்தில் ஒரு வாஞ்சை உண்டு, உங்களுக்கும் இல்லையா? தேவனோடு நெருங்கி நடப்பதையும், அவரைக் கொண்டு, நெருக்கமாகக நடப்பதையும் நான் காண்கிறேன், நான் அதை உங்களுக்கு மேலே காண்கிறேன், உங்களுக்கு மேலே ஒரு நிழல் போன்றது சுற்றி இழுத்துக் கொண்டிருக்கிறது. 140 வேறு யாரோ ஒருவர் ஒரு...இப்பொழுது சற்று நேரம் பொறுங்கள், தேவனுடைய ஆவி அசைவாடிக் கொண்டிருக்கிறது. இது பெண்மணி, அல்லது, ஆண், அல்லது, இங்கேயே சரியாக அமைகிறது என்று நான் நம்புகிறேன், இல்லை, அது அங்கே பின்னால் உள்ள அந்த இருக்கையின் பெண்மணி என்று நான் நினைக்கிறேன். ஏதோ கோளாறு உள்ளது, இரத்தம், சகோதரியே, அது சரியா? உங்களுக்கு இரத்த சோகை அல்லது சில-.......ஆம், அங்கேதான் உள்ளது. அது சரிதானே? எழுந்து நில்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துகிறார். அது...ஆமென். அந்தப் பெண்மணி...சரி. 141 அவளுக்குப் பின்னால் மற்றொருவர் கூட இருக்கிறார். அது உண்மை. பெண்மணியே எழும்பி நில்லுங்கள். அது உண்மை. நீங்கள் அதைக் கடந்து செல்லப் போகிறீர்கள். 142 இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், அந்தப் பெண்மணி, அங்கே உங்களுக்கு அருகில், புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் தோழி, சரி, சகோதரியே எழுந்து நில்லுங்கள். நீங்கள் விசுவாசித்தால் கர்த்தராகிய இயேசு அந்தப் புற்று நோயிலிருந்து உங்களைச் சுகப்படுத்துவார். ஆமென். இப்பொழுது உங்களால் முடிந்தளவு ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். சரி, மகனே, அந்தப் பெண்மணியைக் கொண்டு வா. 143 சகோதரியே, நீங்கள் ஒரு விசுவாசியா? இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உணருவது இதுதான் அவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என் சகோதரியே, நான்-நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னுடைய சுகமளித்தலுக்காக உன்னை ஆசீர்வதிக்கிறேன். போய்ச் சுகமாயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுதே விசுவாசமுள்ளவர்களாயிருங்கள், ஒவ்வொருவரும் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 144 இப்பொழுது, சிறிய சகோதரியே, இந்தப் பிற்பகல் அதைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? நீங்கள் ஒரு விசுவாசியா? உங்களுக்காக இதைச் செய்யத் தேவன் என்னை அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் நீங்கள் அதை உண்மையாகவே உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்களைக் குறித்து ஒன்றுமே அறியாத என்னால் உங்களோடுள்ள கோளாறு என்னவென்பதை உங்களிடம் கூற முடிந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அற்புதமாயிருக்கும், அது இருக்காதா? இப்பொழுது பாருங்கள், இதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, நீங்கள் இந்தவிதமாகவே சிறிது காலமாக இருந்து வருகிறீர்கள், நீங்கள் அவ்வாறு இருக்கவில்லையா? அது உண்மை, சிறு வயதிலிருந்தே உள்ளது. இப்பொழுது, உங்களுடைய கண்கள் பார்வை சிதைவு நிலையில் உள்ளன, உங்களுடைய கண்பார்வை அவ்வளவு நன்றாக இல்லை. அந்த ஒரு காரியம் உங்களோடு தவறாயுள்ளது, அது மாத்திரமல்ல. அப்படியானால் நீங்களும் கூட...நீங்கள் தேவனை சேவிக்க முயற்சித்த விதத்தில் உங்களை ஒருபோதும் திருப்திபடுத்திக்கொள்ளவில்லை என்பதை என்பதை நான் காண்கிறேன், நீங்கள் எப்பொழுதுமே தேவனோடு ஆழமாக நடக்க விரும்பினீர்கள், ஏனென்றால் நான் உங்களுடைய பாதையில் ஒரு நிழல்பின் தொடருவதைக் காண்கிறேன். நீங்களும் கூட ஒரு இருதயக் கோளாறினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள், (அது சரிதானே?), அது உங்களைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கிறது. அது சரிதானே? இப்பொழுது, என்ன...? அது உண்மையா? நான் உங்களிடம் உண்மையைக் கூறினேனா? 145 இப்பொழுது, தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில் நீங்கள் என்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வீர்களா? அது...உங்களுடைய வாழ்க்கையில் என்ன இருந்து வருகிறது என்பதை நான் அறிந்திருந்தால், உங்களுடைய வாழ்க்கையில் என்ன இருக்கும் என்று எனக்குத் தெரியுமா? இப்பொழுது நீங்கள் தேவனுக்கு முன்பாக அவரை உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டு, உங்களுடைய தலையை உயர்த்தி, களிகூர்ந்து, தேவனைத் துதித்து, உங்களால் முடிந்தளவு அவரோடு நெருங்கி ஜீவித்து, ஒரு ஆரோக்கியமான ஸ்திரீயாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கூறுவீர்களா? நீங்கள் அதைச் செய்ய விரும்புகிறீர்களா? முன்னோக்கி வாருங்கள். 146 எங்கள் பரலோகப் பிதாவே, நான் இந்த வாலிப பெண்மணியை ஆசீர்வதிக்கிறேன், எல்லா காரியங்களையும் நீக்கிவிடும். கர்த்தாவே, அவள் அங்கே அந்த இலக்கை நோக்கிக் கடினமாக அழுத்தம் கொடுத்து, அங்குச் செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். சாத்தான் அவளை ஒரு அகால கல்லறைக்கு அனுப்ப தீர்மானித்திருக்கிறான், ஆனால் நீர் அவளைச் சுகப்படுத்த இங்கே இருக்கிறீர். கர்த்தாவே, நான் அவளை ஆசீர்வதிக்கிறேன், அதாவது இந்த இருதயக்கோளாறு அவளை விட்டுப் போய்விடும், அவள் ஒரு-ஒரு நலமான ஸ்திரீயாக இருப்பாள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 147 இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசியுங்கள். சரி. சகோதரியே, நீங்கள் உங்களுடைய கண்ணாடியைக் கூடக் கழற்றிவிட்டு, மேடையை விட்டு வெளியே சென்று சுகமடைந்துவிடலாம். உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் ஒவ்வொருவரும், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுவோமாக. 148 சரி. இப்பொழுது, அது அவளுடைய செவித்திறன். நான் அதை இப்பொழுது உன்னுடைய...உன்னுடைய கண்கள் மிகவும் மோசமடைந்து, நீ குருடாயப் போகிறாய். தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய முழு இருதயத்தோடு? 149 பாருங்கள், அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த யாரோ ஒருவர் எனக்குக் குறுக்கே சென்றார். அது அங்குச் செல்வதற்கு முன்பு நான் அதைப் பிடிக்க நேர்ந்தது. நான் என்னவென்று காண்கிறேன்... 150 இப்பொழுது, நீங்கள் குருடாயிருக்கப் போகிறீர்கள். தாயே, இயேசு கிறிஸ்து உமக்குப் பார்வை அளிக்க இங்கிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய முழு இருதயத்தோடு? இப்பொழுது, தாயே, நீங்கள் சற்று வயதானவர்களாயிருக்கலாம், ஆனால் தேவன் உங்களை நேசிக்கிறார். நான் உங்களுடைய கரத்தைப் பற்றிக் கொள்ளும்போது, இன்றிரவு வீட்டில் உள்ள என்னுடைய சொந்த அருமையான தாயார் எனக்காக ஜெபித்துக் கொண்டிருப்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்; அவள் ஒவ்வொரு இரவும் ஜெபிக்கிறாள். அன்னையர் தின ஆசீர்வாதங்களில் மகத்தான ஒன்றை நீங்கள் இப்பொழுது பெற்றுக்கொள்ள முடியும், உங்களுடைய- -உங்களுடைய இரட்சிப்புக்கு வெளியே, நீங்கள் நல்லதைக் காணும்படியாகவும், மீண்டும் சுற்றி வரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அது அற்புதமாயிருக்க வில்லையா? இப்பொழுது, அன்புள்ள தாயே, இந்நாட்களில் ஒன்றில் நீங்களும் நானும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக நிற்க வேண்டும் என்பதை நான்-நான் அறிவேன். இப்பொழுது, உங்களைச் சுகமாக்கும்படி நான் அவரிடத்தில் கேட்கப் போகிறேன், அவரைக் குறித்து நான் கூறியிருப்பது உண்மையென்று நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் இப்பொழுது உங்களுடைய தலையை வணங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 151 என் பிதாவே, ஒரு அருமையான தாய் என் தோளின் மேல் அவளுடைய தலையைச் சாய்ந்து, அழுகிறாள், குருடாயிருக்கிறாள், சாத்தான் அவளுக்கு இந்தத் தீங்கைச் செய்திருக்கிறான், அவளுடைய கண்கள் நரம்பு தளர்ச்சியடைந்து, அவள் குருடாகிவிட்டாள். ஆனால் பிதாவே, நீர் அவளுக்குப் பார்வையைத் திரும்ப அளிக்க இங்கிருக்கிறீர். அவள் இன்றிரவு மிகவும் தாழ்மையாய், பணிந்து நின்று கொண்டிருக்கிறாள், நான் பண்டைய சாராளைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறேன், வாசலில் குருடான பர்திமேயுவைக் குறித்தும் நினைக்கிறேன், நீர் களிமண்ணின் மேல் உமிழ்ந்து, அவனுடைய கண்களில் பூசினீர். இப்பொழுதும், பிதாவே, நீர் இங்கே இன்றிரவு ஒரு மாம்ச சரீரத்தில் எங்கள் மத்தியில் வீற்றிருந்தால், அவள் ஓடிப்போய், தன்னுடைய தலையை உம்முடைய தோளின் மேல் சாய்த்து நிற்க, நீர் அவளை ஆசீர்வதிப்பீர், அருமையான பிதாவே. நான் என்னுடைய...நான் மிகவும் ஏழ்மையான ஒரு பதிலி, ஆனால், அன்புள்ள தேவனே, நீர் நீதியை எதிர்நோக்கியிருந்தால், அது எங்கே காணப்படும்? எனவே பிதாவே, நீர் அவளுக்கு மீண்டும் பார்வை அளிக்கும்படியாக, நான் அவளை ஆசீர்வதிக்கிறேன். உம்முடைய குமாரன் இயேசுவின் நாமத்தில், இந்தக் குருடான ஆவி இந்த வயோதிக தாயை விட்டு நீங்கி, இப்பொழுது அவள் காணக்கூடியவளாக இருப்பாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 152 இப்பொழுது, தாயே, நீங்கள் இங்கே என்னை நோக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் என்னைப் பார்க்கிறீர்களா? நீங்கள் என்னை நன்றாகப் பார்க்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய விரலை என்னுடைய மூக்கின் மேல் வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான்...உங்களால் என்னுடைய விரல்களைக் காண முடிகிறதா? (அந்தச் சகோதரி, "என்னால் எப்படியும் ஓரளவு காண முடிகிறது" என்கிறார்) சரி, இப்பொழுது உங்களால் என்னுடைய விரல்களைப் பார்க்க முடிகிறதா? ("ஓ, ஆம்.") உங்களால் அவைகளைப் பார்க்க முடிகிறதா? நான் எத்தனை வைத்திருக்கிறேன்? ("ஒன்று.") சரி, இப்பொழுது எத்தனை பேர்? ("இரண்டு.") அப்படித்தான், தாயே, நீ உன்னுடைய பார்வையைப் பெற்றிருக்கிறாய். 153 என்ன சம்பவித்துள்ளது, சாத்தான், ஒரு குருட்டு ஆவி... இப்பொழுது, வேதம், "ஊமையும் செவிடுமான ஆவி..." என்று கூறியுள்ளது. இப்பொழுது, மருத்துவர் அதை-அது உங்களுடைய செவிப்பறை செயலிழந்துவிட்டதாக, அல்லது உங்களுடைய கண்கள், நரம்புகள் மரித்துப் போய்விட்டன என்று கூறுவார், உங்களுக்குத் தெரியும். ஆனால் கவனியுங்கள், அது என்னவெனில், அவர் கூறுகிற ஒரே காரியம், நரம்பு மரித்ததுவிட்டது. ஆனால் அதை மரிக்கச் செய்தது எது? ஏதோ ஒன்று அது இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் பற்றிக்கொண்டது, அது உங்களுடைய சரீரம் முழுவதும் மரிக்கவில்லை, அது அங்கே மாத்திரம் மரித்துவிட்டது. சரி. இப்பொழுது, நான் என்னுடைய கரத்தைச் சுற்றி ஒரு வெளிப்படையான பட்டையைக் கட்டியிருந்தால், அது அதை இந்த விதமாகப் பிடித்துக் கொண்டால், இரத்த ஓட்டத்தை நிறுத்திவிடும். பார்த்தீர்களா? சரி அப்படியானால், நான் விரல்களில் தடவும் எல்லா பூசுமருந்தும் அதற்கு உதவாது, செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், இயற்கை மீண்டும் செயல்பட அதை அவிழ்த்து விட வேண்டும். அது சரிதானே? பாருங்கள், பார்வையின் ஆற்றல், பார்வை நரம்பு, உங்களுடைய கண்ணில் பாய்ந்து கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன், ஒரு பிசாசு, ஒரு குருட்டு ஆவி உங்களுடைய நரம்புகளைப் பிடித்து அதைப் பற்றிக்கொண்டது. பார்த்தீர்களா? இப்பொழுது அது போய்விட்டது, அந்தக் காரணத்தினால்தான் உங்களால் நன்றாகக் காண முடிகிறது. 154 நீங்கள் சரியாகிவிடப் போகிறீர்கள். இப்பொழுது உங்களால் நன்றாகக் காண முடிகிறதா, சரிதானே? பாருங்கள்...? அவள் இப்பொழுது நன்றாகக் காண்கிறாள் என்று கூறுகிறாள். என் தாயே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்களாகவே மேடையிலிருந்து இறங்கி, களிகூர்ந்துகொண்டும், தேவனைத் துதித்துக் கொண்டும் செல்லுங்கள். நாம், "தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக" என்று கூறுவோமாக. 155 சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்? முன்னோக்கி வாருங்கள். நீங்களும் கூட உங்களுடைய கண்கள் சுகமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள், இல்லையா. நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா? சகோதரியே, கிட்டத்தட்ட கண் பார்வையற்றவளாக இருந்த அந்தப் பெண்ணை அவரால் குணப்படுத்த முடிந்திருந்தால், நேற்றிரவு முழுமையாகக் குருடாயிருந்த அந்த ஸ்திரீக்கு அவரால் பார்வையை அளிக்க முடிந்தால், அவரால் உங்களுடைய பார்வையை உங்களுக்கு அளிக்க முடியுமா? இப்பொழுது சமீபமாயிருக்கிறவர் உங்களை ஆசீர்வதிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, தேவன் அதைச் செய்வார் என்று நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், அவர் உங்களிடம் பாய்ந்து வந்து, உங்களைக் குணப்படுத்தி, ஆசீர்வதித்து, அதிலிருந்து உங்களை விடுவிப்பார். உங்களுடைய கண்கள்- மோசமடைந்து கொண்டிருக்கின்றன, அவைகள் தொடர்ந்து மோசமாகிக் கொண்டேயிருக்கின்றன. அது சரிதானே? அதே காரியம், சகோதரியே, இது ஒரு பிசாசின் வல்லமையாயுள்ளது, அது அடைத்துக் கொண்டிருக்கிறது..மருத்துவர்களால் அதைக் குறித்து மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது, ஏனென்றால் பாருங்கள், அது-அது முடிந்துவிட்டது, அவர் அவ்வண்ணமாய்க் கூடக் கூறியிருக்கிறார். இப்பொழுது, அது...அது அங்கே உள்ள நரம்பை, அதாவது கண் நரம்பை, துண்டித்துவிடுகிறது, அதனால், இனி ஆற்றல் அதன் வழியாகப் பாயாது. 156 இப்பொழுது நரம்பு உங்கள் கையில் துண்டிக்கப்படவில்லை, அல்லது-அல்லது வேறு எங்கும் இல்லை, அது உங்கள் கண்ணில் இருக்கிறது; அது உங்களுடைய காதுகளில் இருந்தால், அப்பொழுது உங்களால் கேட்க முடியாது. இப்பொழுது, மருத்துவர் நரம்பு செயலிழந்துவிட்டது என்று கூறுவார், நிச்சயமாகவே அவர் ஐம்புலன்களின் பேரில் செயல்படுகிறார். ஆனால் இயேசு, "செவிடான ஆவி அந்த மனிதனிலிருந்து வெளியேறியபோது," என்றார், செவிடான ஆவி. "குருடான ஆவி மனிதனை விட்டுப் புறப்பட்டுச் சென்றபோது." பார்த்தீர்களா? அவர்...அது ஒரு ஆவி, இயற்கைக்கு மேம்பட்டது. 157 இப்பொழுது, தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின் பேரில் உங்களுக்காக விசுவாசமுள்ள ஒரு ஜெபத்தை ஜெபிக்கும்படி நான் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றும் அது அந்த ஆவியை உங்களிடத்தில் துரத்திவிடும் என்றும், நீங்கள் சுகம் அடைந்து விடுவீர்கள் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? முன்னே வாருங்கள், என் சகோதரியே. 158 தேவனே, நினைக்கிறேன், வீதியில் அவளுடைய கரத்தில் ஒரு வெள்ளைக் கைத்தடி இருந்தது. இதுவே அந்த வேளையாயுள்ளது. ஓ தேவனே, அவர்கள் அவளைப் புறக்கணித்துவிட்டார்கள், இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நான் தரிசனமாகக் கண்டேன், ஆனால், நீர் அவளைச் சுகப்படுத்த முடியும். 159 சாத்தானே, ஸ்திரீயை விட்டுவிடு, குருட்டு ஆவியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டு வெளியே வா! ஆமென். 160 இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஏன், உங்களுடைய கண்ணாடியைக் கழற்றி விட்டுவிட்டு செல்லுங்கள். உம்-ஹூம். அங்கே அவள் தன்னுடைய கண்ணாடியின்றி செல்கிறாள். அவள்...சரி. இப்பொழுது ஒவ்வொருவரும் முன்னோக்கி வாருங்கள்; ஒவ்வொருவரும் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 161 சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்? நீங்களும் கூடக் கண்ணாடி அணிந்திருப்பதை நான் காண்கிறேன். ஆம், அம்மா. இப்பொழுது, நாம்...இப்பொழுது, நீங்கள் என்னை நோக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, நாம் அந்நியர்கள், சகோதரியே, நாம் அந்நியர்கள் அல்லவா? நான் முயற்சித்துக் கொண்டிருக் கவில்லை...உங்களோடுள்ள கோளாறு என்னவென்பதை என்னால் காண முடியும் வரைக்கும்தான், அதன் பின்னர் நாம் முன்னோக்கிச் செல்வோம். இப்பொழுது, நான் உங்களைத் தொடர்பு கொள்ள போதுமான அளவு பேச விரும்புகிறேன். இல்லை, ஆனால் நீங்கள் ஆர்வங்கொண்டிருப்பது உங்களுடைய கண்கள் அல்ல. உங்களுக்கு மூட்டுவலி உள்ளது, உங்களுக்கு இல்லையா? அது சரிதானே? சரி. நீங்கள் ஒரு நிமிடம் இங்கே வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 162 எங்கள் பரலோகப் பிதாவே, எங்களுடைய சகோதரியைச் சாத்தான் கட்டியிருக்கிறான், ஆனால் அவளை விடுவிக்க நீர் இங்கே இருக்கிறீர். 163 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சாத்தானே அவளை அவிழ்த்துவிடு, அந்த ஸ்திரீயிலிருந்து வெளியே வா! 164 இப்பொழுது, தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில் நீங்கள் எனக்குக் கீழ்ப்படிவீர்களா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள், உங்கள் கால்களை இந்த விதமாக மேலும் கீழும் மிதிக்க வேண்டும். மூட்டு வீக்கம் போய்விட்டது, நீங்கள்...ஆமென். இப்பொழுது இங்கே...?... 165 மூட்டு வீக்கத்தினால் அவள் விறைத்துப் போகவில்லை, தேவன் அவளை அதிலிருந்து சுகப்படுத்தியிருக்கிறார். அது மாத்திரமல்ல, ஆனால் அவளுடைய கண்களும் கூடக் குணமாகிவிட்டன, அது பார்வைக் கோளாறு, அது போய்விட்டது, கண்ணுக்குப் பின்னால் உள்ள கண்புரை. இப்பொழுது ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். தேவனில் விசுவாசமாயிருங்கள், தேவன் அதை நிறைவேற்றுவார். 166 சரி, இப்பொழுது அந்தப் பெண்மணியைக் கொண்டு வாருங்கள். சரி. சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கு வந்துள்ள ஒரு-ஒரு செய்தித்தாளில், அங்குள்ள காங்கிரசார் அளித்த சாட்சியைக் குறித்து படித்துக் கொண்டிருப்பதை நான்-நான் காண்கிறேன். அது அற்புதமா யிருந்தது, அப்படித்தானே, அம்மா? அது மிகவும் அருமையாயுள்ளது. ஆம், அம்மா. உங்களில் அநேக காரியங்கள் தவறாயிருக்கின்றன. அது சரிதானே? ஒரு சிறுநீரகக் கோளாறு உங்களைக் காலங்காலமாகத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ஒரு பழைய பெண்மை ஒழுங்கு மற்றும் மற்ற காரியங்கள். அப்பொழுது உங்களுக்கு மூட்டு வீக்கமும் கூட உண்டு, சகோதரியே, உங்களுக்கும் இருக்கவில்லையா? நீங்கள் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்க முயற்சிப்பதை நான் காண்கிறேன், இரவிலே நீங்கள் விரைத்துப் போய்விடுகிறீர்கள். அது சரிதானே? அது உண்மை. உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சகோதரியே, இயேசு கிறிஸ்து உங்களை இப்பொழுதே சுகப்படுத்துகிறார். ஆம். இந்த விதமாக உங்கள் கால்களை மேலும் கீழும் அடியெடுத்து வைக்கவும். அவைகளை மிதித்துப்போடுங்கள்...பயப்படாதே. இந்த விதமாக உங்களுடைய பாதங்களை மேலும் கீழும் அசையுங்கள். நீங்கள் உங்களுடைய... அது உண்மை, தாயே. மேடையை விட்டு இறங்கி, "அன்புள்ள இயேசுவே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள், அது முடிந்துவிட்டது. நாம், "தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக" என்று கூறுவோமாக. நம்முடைய சகோதரி குணமடைந்துவிட்டாள். அது உண்மை. இப்பொழுது நீங்கள் வரும்போது ஒவ்வொருவரும் பயபக்தியோடிருங்கள். (சரி, ஒரு நிமிடம். நீங்கள் விரும்பினால், பகுத்தறிதலின் கீழுள்ள இந்த ஒன்றை நான் இன்னும் எடுத்துக் கொள்ளட்டும்.) 167 எப்படியாயினும் அதைத்தான் நான் கூற வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். நீங்கள் யோசித்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் பாருங்கள், பதற்றமடையாதீர்கள்; நீங்கள் சில காலமாகவே பதட்டமாக இருந்து வருகிறீர்கள். இப்பொழுது, இதை நீங்கள் இப்பொழுது உணருகிறீர்கள், சகோதரியே, இது உங்களுக்குத் தீங்கு விளைவிப்பதல்ல, அது உங்களுக்கு உதவி செய்வதற்கான ஏதோ ஒரு காரியமாயுள்ளது. பார்த்தீர்களா? அது உங்களுக்கு உதவி செய்யும் ஒன்று, அது தேவனுடைய தூதனாயுள்ளது. அது நிச்சயமாகவே உங்களுடைய-உங்களுடைய ஆத்துமாவை பயமுறுத்துகிறது. 168 இப்பொழுது, நீங்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள், நீங்கள் அப்படித்தானே? நீங்கள் இப்பொழுது மாதவிடாயிலிருந்து வெளியே வந்ததிலிருந்து அதை உடையவர்களாயிருக்கிறீர்கள்; நீங்கள் அதில் சில காலமாக இருந்து வருகிறீர்கள். அது சரிதானே? முற்றிலும் சரி. உண்மையாகவே களைப்பு உணர்வுகள் உங்கள்மேல் வந்து சேரும். அது உண்மையல்லவா? மற்றொரு காரியம், உங்களுக்கும் கூட உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை நோய் உள்ளதா? அது உண்மையா? அது சரிதான். சரி, உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு சிறுநீரகக் கோளாறு, அது மிகவும் வேதனையாகவும், சோர்வாகவும் இருக்கிறது. சாயங்கால நேரத்தில், நீங்கள் ஒரு நாற்காலியில் அமரச் செல்லுகிறீர்கள்... அது சரிதானே? தாயே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் மேடையை விட்டுக் கீழே சென்று சுகமாயிருங்கள். 169 நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுவோமாக. சரி. ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது ஒரு நிமிடம். [ஒலிநாடாவில் காலியிடம்]...இப்பொழுது இந்தக் கூட்டத்தினரைக் காணும்போது, அது ஒருவிதமான பால் போன்ற தோற்றமளிப்பது போன்று காணப்படுகிறது, ஒருவிதமான பாலேடு போன்ற தோற்றம் கட்டிடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஏன், அது பரிசுத்த ஆவியாகும். மேலும்-மேலும் நண்பர்களே, அது முழுவதுமாக உங்கள்மேல் உள்ளது. நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் சுகமடைய முடியும். இப்பொழுது, என்னால் முடிந்தால், தேவன் எனக்கு உதவி செய்வாரானால், நான் கூட்டத்தினருக்காக ஜெபிக்க முயற்சிக்கப் போகிறேன். 170 மேலும், இங்கே சக்கர நாற்காலிகளில் அமர்ந்துள்ள சிலரை நான் காண்கிறேன், நான் கீழே வந்து உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். (இப்பொழுது, நாற்காலிகளில் உள்ள அந்த ஜனங்களுக்கு நான் வருவதற்கு முன்பு, நான் மிகவும் பலவீனமடைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.) 171 இப்பொழுது, இப்பொழுது, சகோதரியே, நீங்கள் அங்கே கட்டிலின் மேல் இருக்கையில், முயற்சி செய்யுங்கள்... என்னால் கூடுமானால், நான் உங்களைக் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்ன சம்பவித்தது என்று எனக்குத் தெரியாது. இங்கே இரண்டு...இடையில், நீங்கள் பாருங்கள், அது என்னை அடைத்து வைத்துள்ளது. இப்பொழுது, உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்க முயற்சியுங்கள். 172 அங்கே ஊன்றுகோல்களோடு, நாற்காலியில் இருக்கும் என் சகோதரனே, இப்பொழுது விசுவாசமுள்ளவராய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 173 இப்பொழுது, நாம் ஜெபிக்கையில் இந்த ஜனங்களுக்காக ஜெபிக்க ஒவ்வொருவரும் எனக்கு உதவி செய்வார்களா? 174 பிதாவே, எங்களுடைய அருமையான சகோதரியை இன்றிரவு ஆசீர்வதியும், அவள் இப்பொழுது சுகமடைந்து, இந்தக் கட்டிடத்தை விட்டுச் சுகமாகச் செல்வாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 175 இங்கிருந்து புறப்பட்டு வாருங்கள். நீங்கள் மேலே வாருங்கள், அடுத்தது. சிறிய சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்? ஓ, என்னே, நான்... என்ன..உன்னுடைய... என்னவென்று உனக்குத் தெரியுமா? உங்களுடைய பிரச்சனையை நான் உங்களிடம் கூற வேண்டுமா? அது முதுகெலும்பின் வளைவு. அது சரிதானே? சரி. 176 தேவனே, இந்த பரிதாபமான சிறுமியை ஆசீர்வதியும், அவள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடைவாளாக. ஓ! தேவனே, பிதாவே, இந்தச் சிறுமியை ஆசீர்வதியும். நீர் அவளைச் சுகப்படுத்தி, அவளை நலமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். அவள் சரியாகிவிடுவாள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வாருங்கள், சகோதரியே. பிதாவே, நீர் எங்களுடைய சகோதரியை ஆசீர்வதித்து, அவளைச் சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. பெண்மணியே வாருங்கள். பிதாவே, நீர் எங்களுடைய சகோதரியை ஆசீர்வதித்து, நான் அவளை ஆசீர்வதிக்கையில் அவளைச் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 177 சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்? ஆம். உங்களுக்கு- உங்களுக்கு விசுவாசம் உண்டு, உங்களுக்கு இல்லையா? சகோதரியே, மூட்டு வீக்கம் ஏற்கனவே உங்களை விட்டுப் போய்விட்டது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 178 சரி. நீங்களும் அவ்வாறே சகோதரியே. இப்பொழுது போய் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். 179 ஒவ்வொருவரும் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். சரி. நான் கேட்டால் அது அவனை விட்டு நீங்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தச் சிறு நபரும், தாயாரும் கூடச் சுகமடைவார்களாக. இப்பொழுதே போ, அவன் சுகமடையப் போகிறான், தொல்லை அவனை விட்டுப் போகப் போகிறது, அவன் சரியாகி விடுவான். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இயேசுவின் நாமத்தில், என்னுடைய சகோதரியின் சுகமளித்தலுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். அருமையான சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவள் சுகமடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். 180 இப்பொழுது, அது...சகோதரியே, வாருங்கள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு அவரை விசுவாசிக்கிறீர்களா? சரி. நீங்கள் விரும்பினால், தேவன் உங்களுடைய இருதயக் கோளாறை கடந்து செல்ல உங்களுக்கு உதவுவார். 181 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அவளுடைய சுகமளித்தலுக்காக வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 182 என் சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 183 ஓ தேவனே, என் சகோதரனின் சரீர சுகமளித்தலுக்காக நான் ஆசீர்வதிக்கிறேன். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 184 சகோதரனே, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? ஏதோ ஒன்று சம்பவித்தது. நான் இதை உங்களுக்குக் கூற வேண்டும், பாருங்கள், ஏனென்றால் நான் உங்களுக்குச் சொன்னாலொழிய நீங்கள்-நீங்கள் அதைக் கடந்து செல்ல முடியாது. நான் உங்களிடம் கூறினால், நீங்கள் என்னைத் தேவனுடைய தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் விட்டுவிடாத, ஏதோ ஒரு காரியத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் (அது சரிதானே?), நீங்கள் கொண்டுள்ள ஒரு பழக்கத்தை நீங்கள் விட்டுவிட வேண்டும். சரியாக. போங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. என் சகோதரியே, நீங்கள் விசுவாசிப்பீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சகோதரியே, உங்களுடைய சுகமளித்தலுக்காக நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். இப்பொழுது போய் விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் உங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக்கொள்வீர்கள். 185 சரி. என் சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அநேக காரியங்கள்: களைப்பு, முன்பிருந்த மாதவிலக்கு, மூட்டு வீக்கம், இன்னும் அப்படியே...அது சரிதானே? மிகவும் சகோதரியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் போய்ச் சுகமாயிருங்கள். சரி. அருமையான சகோதரியே வாருங்கள். பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியை ஆசீர்வதித்து, இப்பொழுதே அவளைச் சுகப்படுத்தும். நான் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். சரி. சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுடைய சுகமளித்தலுக்காக நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். இப்பொழுது போய், "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி" என்று கூறி களிகூருங்கள். சரி. சகோதரியே, நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் இப்பொழுதே சுகமடைந்து, குணமடையும்படி நான் அவரைக் கேட்கிறேன். போய், "கர்த்தாவே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள். 186 இப்பொழுது, கூட்டத்தாரே, ஊ, ஜனங்களே, நீங்கள் நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றவுடனே தேவனுக்கு நன்றி செலுத்தி, "கர்த்தாவே, உமக்கு நன்றி. கர்த்தாவே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள். யாவரும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உம்முடைய மகிமைக்காக எங்கள் சகோதரியைச் சுகப்படுத்தும். ஆமென். 187 சரி. இப்பொழுது, சகோதரியே, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? ஒரு நிமிடம், அது ஒருவிதமான...அங்கே பேசுதல், என்னை ஒருவிதமாக அசைப்பது போன்றது. ஒரு நிமிடம் இந்த வழியைப் பாருங்கள். உங்கள்மேல் விநோதமான ஏதோ ஒன்று கிரியை செய்வதைக் காண்கிறேன், அது...நீங்கள் சற்று பயமாக இருக்கிறீர்கள், நீங்கள் அப்படித்தானே? நீங்கள்...பாருங்கள், அது என்னவென்றால், நீங்கள் இருக்கின்ற வாழ்க்கையின் நேரமாயுள்ளது, உங்களுக்கு ஸ்திரீகளுக்கான ஒரு கோளாறு உள்ளது. எனவே, இப்பொழுது நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று, சுகமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆமென். சரி. சரி. சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுடைய சுகமளித்தலுக்காக வேண்டிக்கொள்கிறேன். கர்த்தாவே, அதை அருளும். இப்பொழுது களிகூர்ந்துகொண்டு, சந்தோஷமாயிருங்கள். 188 சரி. சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் முன்பு போலவே சாப்பிட விரும்புகிறீர்களா (அது சரிதானே?) மீண்டும் ஒரு நல்ல ஆரோக்கியமான வயிற்றைப் பெறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் போய் நீங்கள் செய்ய விரும்புகிறபடியே செய்யுங்கள், ஆமென். 189 சரி. நீங்கள் பெண்களின் தொல்லையிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள், சகோதரியே, நீங்கள் சுகமடைய விரும்புகிறீர்களா? தொடர்ந்து செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுவோமாக. (என்னால் அதைச் செய்ய முடியாது...) 190 சரி. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீங்கள் விரும்புகிறதை போய்ப் புசித்து, தைரியமாயிருங்கள், தேவன் உங்களை ஆசீர்வதித்து, உங்களைச் சுகமாக்கப்போகிறார். 191 சரி. இப்பொழுது வாருங்கள். சரி, சகோதரனே. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், நீங்கள் குணமடைந்து, உங்களுடைய கண்பார்வை உங்களுக்கு நன்றாக வரும். 192 எங்கள் சகோதரனைத் தேவன் இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிப்பாராக. 193 சரி. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது வாருங்கள். நீங்கள் சுகமடைய விரும்புகிறீர்கள், நீங்கள் உங்களுடைய இருதயக் கோளாறிலிருந்து விடுபட வேண்டுமல்லவா? 194 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவள் சுகமடைவாளாக. (இப்பொழுது அதைக் குறித்து என்ன? ஒவ்வொருவரும்...என்ன கூறுகிறீர்கள்? நான் அங்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இவை அனைத்தும் தானா, அல்லது இன்னும் ஒரு சிலரை நீங்கள் விட்டுவிட்டீர்களா?) 195 இப்பொழுது, அவர்கள் ஜனங்களைச் சக்கர நாற்காலிகளில் உட்கார வைத்து, அவர்கள் வரிசையில் இருக்க போகிறார்கள், நான் இங்கு வந்து, மீதமுள்ள இவர்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். துதியினூடாகத் தொடர்ந்து செல்லுங்கள். நாம் இந்த வரிசையினூடாக மற்றவற்றை பார்ப்போம்...?...அவர் மற்றவர்களை உள்ளே கொண்டு வரப்போகிறார். சரி, அந்தப் பெண்மணியை இங்கே கொண்டு வாருங்கள். அருமையான சகோதரியே வாருங்கள். சரி. பரலோகப் பிதாவே, நீர் எங்கள் சகோதரியை ஆசீர்வதித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளைச் சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். அது எவ்வளவு காலம் உங்களுடைய கரத்திலிருந்து வருகிறது...?... 196 வாருங்கள், சகோதரியே. முன்புபோல் புசித்து, சாதாரணமாக இருக்க நீங்கள் விரும்பமாட்டீர்களா? அது உங்களோடுள்ள கோளாறு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வேன்? இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே. அது சரியா? இப்பொழுது நீங்கள் போங்கள், நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள், சகோதரியே, நீங்கள் சுகமடையப் போகிறீர்கள். அருமையான சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். 197 சரி, என் சகோதரியே. ஓ, நீங்கள் அநேகக் காரியங்களோடு, இருதயக் கோளாறோடு, ஒரு மோசமான நரம்புத் தளர்ச்சியோடு அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். 198 அன்புள்ள தேவனே, நீர் எங்களுடைய சகோதரியைச் சுகப்படுத்தி, அவளைச் சுகப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென் ஆம், அதனால் தான் உங்கள் நரம்புகள்...?... 199 சரி. ஓ, என்னே! அருமையான சகோதரனே, நீங்கள் ஒரு ஊன்றுகோலில் இருப்பதை நான் காண்கிறேன். இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதைச் செய்கிறீர்கள். இப்பொழுது, என் சகோதரனே, என்னால்-என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியாது, ஆனால் நீங்கள் என்னைத் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசித்தால், உங்களோடுள்ள கோளாறு என்னவென்பதை என்னால் அறிந்துகொள்ள முடியும். நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நீங்கள் அதை ஆவியினால் உணர்ந்து கொண்டிருப்பது, அதுவே தேவனுடைய தூதன். 200 உங்களுடைய தொல்லை மனிதனுக்குத் தெரியாது. நீங்கள் மிகவும் பலவீனமடைகிறீர்கள், நீங்கள் உணரவில்லையா? பெலவீனமாகி, பயங்கரமாகப் பலவீனமடைகிறீர்கள். நீங்கள் அதன் பேரில் கிட்டத்தட்ட ஒரு-ஒரு சிறு கணம் நடப்பீர்கள், பிறகு சலித்துப் போய் உட்கார்ந்துவிடுவீர்கள். அது சரியா? அது உண்மை. நீங்கள் அந்தவிதமாகவே செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் எப்படி அறிந்து கொள்ள முடியும்? தரிசனத்தின் மூலமாக மாத்திரமே நான் அறிந்துகொள்ள முடியும், ஏனென்றால் நான் உங்களை அறியேன். அது சரியா? அது என்னவெனில், சகோதரனே, உங்களுடைய முதுகுத்தண்டில் உங்களுடைய நரம்பு மண்டலம் செயலிழந்துள்ளது. இப்பொழுது ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். 201 ஓ தேவனே, இந்த மனிதனை ஆசீர்வதியும், அவருக்குப் பெலனைத் தாரும், நீர், ""நான் பெலனுள்ளவன்' என்று பெலவீனமுள்ளவன் சொல்லட்டும்" என்று கூறினீர். கர்த்தாவே, நான் அவரை ஆசீர்வதிக்கும்போது, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 202 நீங்கள் மேடையிலிருந்து இறங்கிச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உங்களுடைய பழைய ஊன்றுகோலை எடுத்து அங்கேயே வீசிவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள்...?... 203 சரி. சகோதரியே வந்து, இப்பொழுதே சுகமடைவாயாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுடைய கண் கோளாறுக்காக. ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. என் சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறாயா? எங்களுடைய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், என் சகோதரனைக் குணமாக்கும். ஆமென். சகோதரனே, போய் விசுவாசியுங்கள். சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், என் சகோதரியைக் குணமாக்கும். சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியே, உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது போய்க் களிகூருங்கள். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா சகோதரியே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென். 204 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! சரி, நாம் யாவரும், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுவோமாக. நம்முடைய கரங்களை உயர்த்தி அவரைத் துதிப்போம். சரி. இப்போது, இங்கே கீழே சக்கர நாற்காலிகளில் இருக்கும் ஒரு குழுவினரை நாம் இன்னும் சந்திக்கவில்லை. இப்பொழுது, எல்லோரும் என்னோடு ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, இந்த ஜனங்களிடத்தில் ஜெப அட்டைகள் இல்லை, எப்படியிருந்தாலும், நான் அவர்களுக்காக ஜெபிக்கப் போகிறேன், ஏனென்றால் அவர்கள்-அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்; அவர்களில் சிலர், ஒன்று அல்லது இரண்டு பேர் ஜெப அட்டைகளை வைத்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். நான் அவர்களோடு ஜெபிக்க விரும்புகிறேன், என்னுடைய ஊழியக்கார சகோதரர்களும் என்னோடு சேர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 205 இப்பொழுது, அது எப்படி சம்பவித்தது என்றும், அதைக் குறித்த எல்லாவற்றையும் நான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் கூற முடியும், ஆனால் உங்களைச் சுகப்படுத்த, என்னால் முடியாது. ஆனால் நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் உங்களுக்காக ஜெபித்தால், என்னுடைய கர்த்தராகிய இயேசுவை உங்களுடைய சுகமளிப்பவராக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? போதகர்கள் சிலர் இங்கே அவர்களோடு வரிசையில் நிற்கட்டும், எனவே, அவர்களும் கூட, அவர்களால் -அவர்கள் முழுவதுமாக இருக்க முடியும். 206 கூட்டத்தார் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன் இங்கே சில வல்லமையான அற்புதங்களை நிகழ்த்தலாம். இப்பொழுது, முடமானவர்களும், அவதியுறுவோரும், உண்மையாகவே முடமானவர்களும், அவர்கள் வெளியேற முடியாதபடி வளைந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கே அமர்ந்திருக்கட்டும். இப்பொழுது ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். சில ஊழியக்காரர்கள் இங்கே பின்னால் நிற்கட்டும். 207 கிறிஸ்தவ நண்பர்களே, நான் இங்கே இந்த ஜனங்களுக்கு ஊழியம் செய்யும்போது, எத்தனை பேர் என்னோடு ஜெபத்தில் சேர்ந்துகொள்வீர்கள்? நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு என்னோடு விசுவாசிப்பீர்களா? நீங்கள் பயபக்தியோடிருந்து, உங்களுடைய தலையை வணங்கி யிருப்பதோடு ஜெபத்தில் இருப்பீர்களா? இந்த வியாதியஸ்தரை சுகப்படுத்த நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்... ஒருவேளை இங்கே அமர்ந்திருப்பது உங்கள் ஜனங்களாக அவர்களில் சிலர் வளைந்து கொண்டவர்களாகவும் மற்றும் முடமானவர்களாகவும், சிலர் முற்றிலும் குருடர்களாகவும், தங்களுடைய கரங்களில் கைத்தடியை பிடித்திருப்பவர்களாய் இருந்தால் என்னவாகும்? நம்முடைய கர்த்தராகிய இயேசு அவர்களைச் சுகப்படுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, முடமானவர்களைத் தவிர மற்ற யாவரும் அமரலாம். இப்பொழுது முடமானவர்கள் இங்கே இருக்கிறார்கள். (சகோதரன் ஹால் சபையோருக்கு அறிவுறுத்துகிறார்) 208 இப்பொழுது இங்கே முடமாயும், எல்லாவிதமான நெருக்கப்பட்டும், அவதியுறும் உங்களுக்கு, நீங்கள் இங்கே மேடையின் மேல் ஜனங்களில் சிலருக்கு ஆசீர்வாதங்களை கூறுவதை நீங்கள் காணும்போது, உங்களுக்காக என் இருதயம் துடிக்கிறது. இங்குள்ள அநேகர் முடமாயும், வளைந்து கொண்டவர்களுமாயிருந்து சுகமடைந்துள்ளனர்; நீங்கள் அதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உதாரணமாக, திரு. உப்ஷா இங்கே அறுபத்தாறு ஆண்டுகளாக முடமாயிருந்தார், ஒரு சிறு பையனானது முதற்கொண்டே அவர் இருந்த நிலைமையில் உங்களில் ஒருவரும் இல்லை, அவர் பதினேழு வயதாயிருந்தபோது, அவருடைய முதுகு முதலில் உடைந்தபோது சுகமாக்கப்பட முயன்றார். அவர் எங்கள் மறைந்த ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டைப் போல இருந்தார், இடுப்புக்குக் கீழேதான் அவருக்குப் பாதிப்பு இருந்தது. தேவன் என்னிடத்தில் செய்யும்படி கூறினபடியே, ஒரு தரிசனத்தைக் கண்டு, என்ன சம்பவிக்கும் என்று அதைக் குறித்து அவரிடம் கூறும்படி மாத்திரமே என்னால் செய்ய முடிந்தது. 209 அவர் மாத்திரமல்ல, சக்கர நாற்காலிகளில் இருந்த மற்றவர்களும், இன்று குணமடைந்து சக்கர நாற்காலிகளில் இல்லை, உங்களில் அநேகருக்கு அது தெரியும். கடந்த வாரம் பீனிக்ஸ், எப்படியாய் தேவன் அவர்களைச் சக்கர நாற்காலிகளிலிருந்து எடுத்தார். 210 நான் இங்கே நின்று கொண்டிருக்கையில், நான் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கையில், உங்களோடு என்ன கோளாறு இருந்தது என்பதை என்னால் உங்களுக்குக் கூற முடியும், ஆனால் நான் சில நேரங்களில்...பெரும்பாலும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுடன் பேசாததற்குக் காரணம், யாராவது சொல்வார்கள், "சரி, யாரும் அங்கே கீழே பார்த்து அந்த மனிதன் ஊனமுற்றவன் என்று சொல்ல முடியும்." அது சரிதான். என்னுடைய ஊழியம் அவ்வளவாக அதில் இல்லை, அது ஒரு ஆரோக்கியமான நபரைப் பார்த்து, அதன்பின்னர் என்ன கோளாறு என்பதை அவர்களிடம் கூறுவது, பாருங்கள், ஆரோக்கியமான தோற்றமுடைய நபர்...நீங்கள் அதைக் கவனிப்பீர்கள். 211 இன்றிரவு கூட்டத்தாரே, அந்நியர்களாகிய உங்களுக்கு, கூடுமானவரையில் அடக்கி வைத்திருக்க முயற்சித்தேன், இந்த ஜனங்களுக்காக ஜெபிக்க கீழே வரும்படியான என்னுடைய பெலத்தைத் தக்கவைத்துக் கொள்ள. இப்பொழுது, நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன்: நான் உண்மையைக் கூறியிருக்கிறேன் என்று முடமானவர்களே, மற்றும் மற்றவர்களே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான்-நான் வந்து உங்களை ஆசீர்வதிக்கத் தேவனிடம் வேண்டிக்கொள்ளப் போகிறேன், உங்களுக்காகவும், தனிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும், தேவன் உங்களைச் சுகமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, அவர் அதை இப்பொழுதே செய்யக்கூடும். நீங்கள் அதை உணர்ந்தால், நீங்கள் எழும்பி நிற்கப் போகிறீர்கள் என்ற விசுவாசம், சரி; நீங்கள் அவ்வாறு உணரவில்லையென்றால், அவர் உங்களைச் சுகப்படுத்தப் போகிறார் என்று விசுவாசியுங்கள். நீங்கள் அவ்வளவு விசுவாசத்தை உடையவர்களாயிருந்தால், அதை வெளியே கொண்டு வர நீண்ட காலம் பிடிக்கும், ஆனால் இயேசு, "உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது" என்றார். ஆனால் இப்பொழுது, நீங்கள் மகத்தான விசுவாசத்தை உடையவர்களாயிருந்தால், அப்பொழுது நீங்கள் சுகமடையமுடியும். 212 சில குருடர்கள் கைத்தடிகளோடு இங்கே உட்கார்ந்திருக்கிறதை நான் காண்கிறேன், நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கூட்டத்தார் அனைவரையும் நான் விரும்புகிறேன்... இது உங்களுடைய தந்தையும் தாயும் அல்லது யாரோ ஒருவர் இங்கே அமர்ந்திருந்தால் என்னவாகும்? 213 இப்பொழுது நாம் உத்தமமாய் இருப்போம். என்னால் செய்ய முடிந்த ஒரே காரியம் அவர்களுக்காகச் சென்று ஜெபிப்பதேயாகும். இப்பொழுது, என்ன தவறு நடந்துள்ளது என்றும், என்ன சம்பவித்தது என்றும் அவர்கள் அறிந்துகொள்ள விரும்பினால், தேவன் அதை வெளிப்படுத்துவார், அது செய்யப்பட முடியும். ஆனால் அவர்கள் ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள், நான் அவர்களுக்காக ஜெபிப்பேனேயானால், தேவன் அவர்கள் சுகமடையச் செய்வார் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவர்கள் அதைத் தங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், அது இப்பொழுதே சம்பவிக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அதைச் செய்வார்களானால்... 214 அது இப்பொழுது சரியாகவில்லை என்றால், சோர்வடைய வேண்டாம், அது இப்பொழுதிலிருந்து ஒரு ஒரு அரை மணி நேரத்தில் வரலாம், இனி ஒரு வாரத்தில் வரலாம், எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் அதை விசுவாசித்தால் அது நிறைவேறும். "உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது." அது வேதவாக்கியமாயிருந்தால், கூட்டத்தார், "ஆமென்" என்று கூறட்டும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 215 மனநல மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து, மனநோயாளிகளை இறுக்கமாகக் கட்டுப்படுத்தும் ஆடைகள் மற்றும் அதுபோன்றவற்றுடன் அவர்கள் இருந்ததை நாம் எத்தனை முறை பார்த்திருக்கிறோம், இப்போது அவர்கள் வீட்டில், சாதாரண மனிதர்களாக, எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இருக்கிறார்கள், பாருங்கள்? 216 இப்பொழுது, நான் ஜெபித்துக் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, ஊழியக்கார சகோதரர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்; கூட்டத்தாரும் அவ்விதமாகச் செய்வார்களா என்று நான் எதிர்பார்க்கிறேன், நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கினால் நலமாயிருக்கும். சகோதரன் ஹால், நீங்கள் இங்கே ஒலிபெருக்கியில் தரித்திருங்கள். பையனே, நீ வரிசையில் என்னோடு வருவாயானால் நலமாயிருக்கும். 217 வியாதியஸ்தருக்காக ஜெபிக்க தேவன் என்னுடைய பையனை அழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதை ரூபகாரப்படுத்த முதலில் ஏதோ ஒன்று சம்பவிக்கிறதை நான் காண விரும்புகிறேன், நீங்கள் பாருங்கள். இது நடந்து கொண்டிருக்கும்போது அவன் என்னோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சரி. (நீங்கள் கூட்டத்தாரிடம் பேசிக் கொண்டிருங்கள்.) (சகோதரன் பிரான்ஹாம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக ஜெபிக்கையில், சகோதரன் ஹால் கூட்டத்தாரிடம் பேசுகிறார். ஒலிநாடாவில் காலியிடம்) 218 கிறிஸ்தவ நண்பர்களே, உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிற உங்களுக்கு, இப்பொழுது உங்களால் முடிந்தளவு ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள், உங்களுடைய சுகமளித்தலுக்காகத் தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இங்கே ஒரு மனிதன் குருடாயிருந்த தன்னுடைய கண்களை இங்கே முன்னும் பின்னுமாகச் சோதித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு பெண்மணி இங்கே சக்கர நாற்காலிக்கு வெளியே தன்னுடைய கால்களை வைத்துக்கொண்டு, ஒரு கறுப்பு நிற பெண்மணி, அவள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் அங்கிருந்து வரப்போகிறாள். இதோ மற்றொரு பெண்மணி எழுந்திருக்கிறாள். சரி. இப்பொழுது ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர்... ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். 219 இப்பொழுது, கூட்டத்தாரும், கட்டிடத்தில் உள்ள ஒவ்வொருவரும் எழும்பி நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஊழியக்கார நண்பர்களே, நீங்கள் இப்பொழுது முன்னோக்கிச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது- உங்களுடைய கரங்களை வைக்குமாறு நான் விரும்புகிறேன், இங்குள்ள என்னுடைய ஊழியக்கார சகோதரர்களே, முன்னோக்கி நடந்து சென்று, அவர்கள்மேல் உங்களுடைய கரங்களை வையுங்கள், எனவே சக்கர நாற்காலிகளிலிருந்து எழும்பி, சுகமடைவதற்கு அவர்களுடைய விசுவாசத்தில் அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். இப்பொழுது, நாம் ஜெபிக்கையில் ஒவ்வொருவரும் இந்த விதமாகத் தேவனண்டை உங்கள் கரங்களை உயர்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 220 இப்பொழுது, பெண்மணியே, இங்குள்ள கறுப்புநிறப் பெண்மணியே, நீங்கள் அங்கிருந்து எழும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்குள்ள இந்தப் பெண்மணியும், அங்குள்ள பெண்களும், நீங்கள் இப்பொழுது உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லா கிறிஸ்தவர்களும் ஜெபியுங்கள். 221 இப்பொழுதும் பிதாவே, இந்த ஒரு காரியத்தை அறிந்திருக்கிறபடியால், நாங்கள் இந்த ஜனங்களை உம்முடைய நாமத்தில் ஆசீர்வதித்திருக்கிறோம் அதாவது, "நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் விரும்புகிறவைகளை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள்" என்று நீர் வாக்குப்பண்ணியிருக்கிறாரே. கட்டிலின் மேல் வளைந்து கட்டப்பட்டிருந்த அந்த ஏழ்மையான ஸ்திரீயை நீர் அந்தக் கட்டிலிலிருந்து வெளியே எடுக்க முடிந்தால், கர்த்தாவே, நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் எடுத்துக்கொள்ள முடியும். இப்பொழுதே அவர்கள் சுகமடையவும், நலமடையவும் அருள்புரியும். பிதாவே, உம்முடைய தாழ்மையான ஊழியக்காரனின் ஜெபத்திற்கு செவிகொடும் இப்பொழுது, கர்த்தாவே, இதை அருளும். 222 சாத்தானே, இந்த ஜனங்களைக் கட்டின நீ, அவர்கள் ஜெபிக்கப்பட்டு, தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவர்கள்மீது கேட்கப்பட்டிருக்கின்றன, நீ ஒரு தோல்வியடைந்தவனாயிருக்கிறாய். 223 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அங்கிருந்து எழும்பி வாருங்கள்! இதோ வருகிறாள் ஒரு பெண்மணி, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவள், நாற்காலியிலிருந்து எழுந்து, வருகிறாள். இங்கே நோக்கிப் பாருங்கள், சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து, எந்த ஆதரவுமின்றி நடக்கிறாள்...கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இதோ மற்றொரு பெண்மணி சக்கர நாற்காலியில் செயலிழந்த நிலையில் எழுந்து நின்று தேவனைத் துதித்துக் கொண்டிருக்கிறாள். நாம் எங்கும் தேவனைத் துதித்து நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. அது உண்மை. அங்கே எழும்பி நில்லுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், எழும்பி நில்லுங்கள்! சிறு பையனே, உன்னுடைய கரத்தை அங்கே நீட்டி, சுகமடைவாயாக. சக்கர நாற்காலிகள் பின்னோக்கி நகர்த்தப்படுகின்றன. ஜனங்கள் சக்கர நாற்காலிகளில் விழுந்து, மகிமையான...அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம் ஒரு உண்டாவதாக! என்னுடைய கட்டளை 2